மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Monday, 24 July 2017

காரையாறில் ஆடி அமாவாசை விழா கோலாகலம் : 1 லட்சம் பக்தர்கள் திரண்டனர்




காரையாறில் ஞாயிற்றுகிழமையன்று நடைபெற்ற ஆடிஅமாவாசை விழாவை காண லட்சம் பேர் திரண்டனர். பக்தர்கள் ஆடு, கோழிகளை பலியிட்டு நேர்த்திக்கடனை செலுத்தினர். நெல்லை மாவட்டம் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியான காரையாறு வனப்பகுதியில் சொரிமுத்தையன் கோவில் அமைந்துள்ளது. சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிஅமாவாசை விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். 

அதுபோல் இந்த ஆண்டும் ஆடிஅமாவாசை விழா தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடிஅமாவாசை நிகழ்ச்சி ஞாயிற்றுகிழமையன்று காலையில் துவங்கி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை காண ஆலங்குளம். முக்கூடல், அம்பாசமுத்திரம். சேரன்மகாதேவி, வீரவநல்லூர், வி.கே.புரம். கல்லிடைக்குறிச்சி, ஜமின்சிங்கம்பட்டி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிமாவட்டங்களிலும் பக்தர்கள் ஒருவாரத்திற்கு முன்பே வந்து குவியத்தொடங்கினர். 

பக்தர்களின் வசதிக்காக 400 தற்காலிக கழிப்பறைகள், 60 நிரந்தர கழிப்பறைகள், சிறப்பு பஸ் வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. வி.கே.புரம் நகராட்சி சார்பில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்து செய்து கொடுக்கப்பட்டிருந்தது.  ஆடிஅமாவாசை விழா துவங்கியது. பக்தர்கள் பொங்கலிட்டு சொரிமுத்தையனாரையும், சங்கிலி பூதத்தானையும் வழிபட்டனர். 

பின்னர் மேளதாளம் முழங்க பக்தர்கள் அருள் வந்து சாமியாடினர். அப்போது கூடியிருந்த பொதுமக்கள் சாமியாடியவர்களிடம் குறி கேட்டனர். இந்நிகழ்ச்சியை காண லட்சம் பேரம் திரண்டிருந்தனர். எங்கும் பார்த்தாலும் மக்கள் தலைகளாகவே தென்பட்டது. கோவில் அருகில் உள்ள ஆற்றில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஞாயிற்றுகிழமையன்று காலை முதல் மாலை வரை நீராடி சாமி தரிசனம் செய்தனர். 

ஆடிஅமாவாசை விழாவின் பாரம்பரியமான ராஜதர்பார் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் சிங்கம்பட்டி ஜமீன்தாரர் வாரசுதாரரும், கோவிலிலன் பரம்பரை அறங்காவலருமான முருகதாஸ் தீர்த்தபதி பரிவட்டம் கட்டி குதிரையில் வலம் வந்தார். அவரை கூடியிருந்த லட்சம் பேர் வரவேற்றனர். ஆடி அமாவாசை விழாவையொட்டி பாபநாசம் தாமிரபரணியாற்றில் மறைந்த முன்னோர்களுக்கு ஏராளமான பொதுமக்கள் திதி கொடுத்தனர். காரையாறிலும் ஏராளமானோர் திதி கொடுத்தனர்.  காரையாறில் நடந்த ஆடி ஆமாவாசை விழாவில் அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் வெங்கட்ராமன், துணை வட்டாட்சியர் பூதத்தான், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் பார்கவி தங்கம், ஆழ்வார்குறிச்சி வருவாய் ஆய்வாளர் அருள்ராஜ் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

No comments:

Post a Comment