மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Tuesday, 12 September 2017

தொகுதி மக்களுக்கு சொந்த செலவில் குடிதண்ணீர் வழங்கிய MLA வசந்தகுமார்.



நாங்குநேரி தொகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களில் தொகுதி மக்களுக்கு குடிதண்ணீர் கிடைக்க  எம் எல் ஏ வசந்தகுமார் தனது சொந்த பணத்தில் மின் மோட்டார்கள் பொருத்தி தண்ணீர் கிடைக்க  ஏற்பாடு செய்து கொடுத்தார்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதி கோகிலாம்பாள் பஞ்சாயத்திற்குட்பட்ட கீழசாலைப்புதூர், களக்காடு ஒன்றியத்திற்குட்பட்ட  இடையன்குளம், மீனவன்குளம் மற்றும் கள்ளிகுளம் கிராம மக்கள் தங்கள் பகுதியில் குடிநீர் பிரச்னை உள்ளதால் , அதை தீர்ப்பதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தனர். அப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையான குடிநீர் என  கேட்டறிந்த அவர் அதற்கு தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

இதை தொடர்ந்து அக்கிராமங்களில் தனது சொந்த பணத்தில் தனித்தனியாக ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள மின் மோட்டரினை அளித்து அங்குள்ள கிணற்றில் இருந்து பைப் லைன்கள் அமைத்து அதன் மூலம் மேல்தேக்க குடி நீர் தொட்டியில் ஏற்றி அந்த கிராமங்களுக்கு விநியோகிக்க ஏற்பாடு செய்தார்.  மேலும் பல கிராமங்களில் ஆழ்துளை கிணறுகளை அமைத்து தொகுதி மக்களுக்கு குடிநீர் கிடைக்க நடவடிக்கை அளித்து வருகிறார்.


 இதை தொடர்ந்து அதனை துவக்கி வைக்க வருகை தந்த அவருக்கு அப்பகுதி கிராம மக்கள் பொன்னாடை அணிவித்து நன்றியினை தெரிவித்தனர்.இந்த நிகழ்ச்சியில் அந்த கிராம பெரியவர்கள், காங்கிரஸ் மற்றும் வர்த்தக காங்கிரஸ் நிர்வாகிகள் வக்கீல் விஜயன், சுடலைக்கண்ணு, ராஜகோபால், உன்னங்குளம் சுப்ரமணியன், கிறிஷ்டியான், ஜான்பால்,பொன்ராஜ், ஜான்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment