நெல்லை சந்திப்பு சரணாலயத்தில் 24ம் ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட நீதிபதியும் திருநெல்வேலி மக்கள் நீதிமன்ற தலைவருமான இராஜசேகரன் தலைமை தாங்கினார். மாவட்ட சட்டப்பணிகள் ஆலோசனை குழு செயலர் சார்பு நீதிபதி முன்னிலை
வகித்தார்.
பாளை மறைமாவட்ட செயலக முதல்வர் அந்தோணிகுருஸ்
அடிகளார், திருநெல்வேலி சமூக சேவைசங்க இயக்குனர் மோட்சராஜன், நெல்லை புறநகர் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் நயினாமுகம்மது ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
முன்னதாக சரணாலய இயக்குனர் செயபாலன் அனைவரையும் வரவேற்று பேசினார். ஆண்டறிக்கையை
வனிதா வாசித்தார். விழா நிறைவாக மைக்கேல் அந்தோணிசாமி நன்றி கூறினார்.
இவ்விழாவில் சரணாலய அருட்சகோதரி மேரி,
பணியாளர்கள் சீலா, ஜெனிபர், முகம்மதி, அந்தோணி ஆகியோர்கள் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
No comments:
Post a Comment