மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Saturday, 23 September 2017

சதக்கத்துல்லா அப்பா கல்லூரி மாணவர்கள் தூய்மைபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.







பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி சார்பாக நெல்லை மாவட்டத்தின் தாமிரபரணி தூய்மை படுத்தக்கூடிய இரண்டாம் கட்ட வேலையாக நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் இணைந்து 5௦ க்கும் மேற்பட்ட மாணவர்கள் PVT திரையரங்கம் அருகில் உள்ள கணேசபுரம் பகுதியில் காலை 7 மணிமுதல் 1௦ மணிவரை அந்த பகுதியில் சுற்றியுள்ள குப்பைகளை தூய்மைபடுத்தும் பணியில் ஈடுபட்டார்கள்.

 அதுமட்டுமல்லாமல் அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று தாமிரபரணி பாதுகாப்பு வேண்டிய அவசியம் குறித்தும், குப்பைகளை தவிர்த்து கொள்வது எப்படி அதை எவ்வாறு தூய்மைபடுத்த வேண்டும், பொதுக்கழிப்பிடத்தை ஏன் நாம் பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு சுகாதாரம் சம்பந்தப்பட்ட பல்வேறு விழிப்புணர்வுகளை வீடுவீடாக சதக்கத்துல்லா அப்பா கல்லூரி மாணவர்கள் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களும் மக்களிடத்தில் பிரச்சாரம் செய்தனர்.

 தூய்மை பணி மட்டும்மில்லாமல் தாமிரபரணி பாதுகாப்பு குறித்து பேரணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் பேராசிரியர் ஷாகுல் ஹமீது, பேராசிரியர் முகமது, பேராசிரியர் உமர் பாரூக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  

செய்தி மற்றும் படம் 
திரு. சரவணவேல்.

No comments:

Post a Comment