மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Monday, 18 September 2017

அனிதா மரணத்தில் ஏன் சிபிஐ விசாரணை வைக்கவில்லை ? : நயினார் நாகேந்திரன் கேள்வி



 நீட் தேர்வை எதிர்க்கும் தமிழக அரசியல் கட்சிகளை கண்டித்து பாளையங் கோட்டையில்பாஜக.,சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாளை.,ஜவஹர்  திடலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு   பாஜக மாவட்ட தலைவர் தயாசங்கர் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பு பொது செயலாளர் சுரேஷ், மாவட்ட பொது செயலாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர்முன்னிலை வகித்தனர்.  

 ஆர்ப்பாட்டத்தில்   நீட் தேர்வினை எதிர்க்கும் திமுக உள்ளிட்ட அதன்    கூட்டணி கட்சிகளுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பின்னர் நயினார் நாகேந்திரன் கூறும் போது..விரைவில் தமிழகத்தில் பாஜக  கொடி பறக்கும்.  பாஜக. மிகவும் கட்டுக்கோப்பான ஒழுக்கமான கட்சி.


.திமுக செயல்தலைவர் நீட்டுக்கு எதிராக போராடுகிறார். அவரால் தான்   பாளையில் நாங்கள் 3 ஆயிரம்பேர் கூடியுள்ளோம். அனிதா மரணத்தில் ஏன்  சிபிஐ விசாரணை வைக்கவில்லை என கேள்விஎழுப்பினார். 

தொடர்ந்து மாவட்ட அமைப்பு பொது செயலாளர் சுரேஷ் கூறுகையில்...  அண்டை மாநிலங்களான கர்நாடகா,கேரளா   ஆகியவை நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.ஆனால்தமிழகம் மட்டும் எதிர்ப்பு  தெரிவிப்பது ஏன்? இங்குள்ள அரசியல் தலைவர்கள்   பொது   மக்கள் மற்றும்மாணவர்களை போராட்டம் செய்ய துாண்டுகிறார்கள். சிபிஎஸ்சி  பாடத் திட்டம் ஸ்டேட் போர்டு பாடத்திட்டத்தினை விட   உயர்ந்தது என பொய் கூறுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

செய்தி மற்றும் படம்
திரு. முத்து.

No comments:

Post a Comment