விக்கிரமசிங்கபுரம்
நகரசபையில் குடிநீர் கட்டணம் தற்போது மாதம் 50 ரூபாயாக உள்ளது. இதனை உயர்த்துவதற்கு நகரசபை
நிர்வாகம் முடிவு செய்தது. இதுகுறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கு
எதிர்ப்பு தெரிவித்து அனைத்துக் கட்சியினர், பல்வேறு
அமைப்பினர் மற்றும் பொதுமக்கள், விக்கிரமசிங்கபுரம் நகரசபை
ஆணையாளரிடம் கோரிக்கை மனு அளித்தனர். மேலும் இதுசம்பந்தமாக நகரசபை அலுவலகத்தில்
ஆலோசனை கூட்டம் நடைபெற இருந்தது.
இந்த நிலையில் குடிநீர் கட்டண உயர்வுக்கு
மீண்டும் எதிர்ப்பு தெரிவித்து, அனைத்து கட்சியினர், பொதுமக்கள் நேற்று நகரசபை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம்,
நகரசபை ஆணையாளர் பிரேம் ஆனந்த் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பேச்சுவார்த்தையில், குடிநீர் கட்டண உயர்வு குறித்து அனைத்து
கட்சி அமைப்பினர், பொதுமக்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை
நடத்தி முடிவு எடுக்கப்படும் என கூறியதை அடுத்து முற்றுகை போராட்டத்தை கைவிட்டு
அனைவரும் கலைந்து சென்றனர். திடீரென நடந்த இந்த முற்றுகை போராட்டத்தால்
அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து நகரசபை அலுவலகத்தில் குடிநீர்
கட்டணம் உயர்வு தொடர்பாக நடைபெற இருந்த ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
செய்தி மற்றும் படம்
திரு.முத்து.

No comments:
Post a Comment