மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Thursday, 14 September 2017

ஷிபா மருந்தகம் லேப்ஸ் மற்றும் கிளினிக்-ன் 2 ம் ஆண்டு துவக்க விழா.




பாளையில் ஷிபா மருந்தகம் லேப்ஸ் மற்றும் கிளினிக்-ன் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. விழாவில் கே.டிசி.நகர், வி.எம்.சத்திரம் மற்றும் மகாராஜ நகர் பகுதி வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.

துவக்க விழாவிற்கு ஷிபா மருத்துவமனை குழுமத்தின் நிர்வாக இயக்குனர் எம்.கே.எம்.முகம்மதுஷாபி தலைமை தாங்கி பேசியதாவது… இந்த ஷிபா மருந்தகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் துவங்கப்பட்டு வாடிக்கையாளர்களின் ஆதரவோடு சிறப்பாக நடைபெற்று வருகிறது. குறைந்த செலவில் தரமான மருத்துவ சேவை புரிந்து வரும் இந்த சென்டரில் வாடிக்கையாளர்களுக்கு ஷிபா ஹெல்த்கார்டு வழங்கப்படுகிறது. இந்த கார்டில் வாடிக்கையாளர்கள் செலுத்தும் தொகையிலிருந்து 20 சதவீதம் வரை சேமிக்கலாம். மருந்தகத்தில் வாங்கும் தொகையில் 10 சதவீதம் தள்ளுபடி மற்றும் ஒவ்வொரு 100 க்கும் 10 பாயிண்டுகள் வீதம் வாடிக்கையாளர்களின் ஹெல்த்கார்டில் புள்ளிகளாக சேர்க்கப்படும். 

மேலும் இந்த கார்டில் 10 சதவீதம் வரை வாடிக்கையாளர்களின் புள்ளிகளை இரத்த பரிசோதனை அல்லது உடல் பரிசோதனை தொகையில் கழித்து கொள்ளலாம். டோர் டெலிவரி வசதியும் செய்யப்படுகிறது. வாடிக்கையாளர்களின் நலன் கருதி இந்த சென்டர் காலை 7 மணி; முதல் இரவு 10.30 மணி வரை செயல்படுகிறது. 

தினமும் வெளி நோயாளிகள் பிரிவில் பொது மருத்துவம், எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை, பொது அறுவை சிகிச்சை, நரம்பியல் சிகிச்சை, காது மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை, புற்று நோய் மருத்துவம், மனநல மருத்துவம் ஆகிய துறைகளை சார்ந்த சிறப்பு மருத்துவ நிபுணர்கள் வருகை தருகின்றனர் என்று கூறினார். ஷிபா மருத்துவ குழுமத்தின் மருத்துவ இயக்குநர் முகம்மது அராபத் வாடிக்கையாளர்களுக்கு நன்றி கூறினார்.

No comments:

Post a Comment