மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Friday, 15 September 2017

எப்.எக்ஸ் பொறியியல் கல்லூரியில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கு.




வண்ணார்ப்பேட்டை, எப்.எக்ஸ் பொறியியல் கல்லூரியில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கு 14.9.17 அன்று கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் ஏராளமான கல்லூரி மாணவ மாணவியர் தங்கள் பேராசிரியர்களுடன் கலந்து கொண்டனர்.  பேராசிரியர் அய்யனார் ராஜேந்திரன் அனைவரையும் வரவேற்றார்.  கல்லூரியின் முதல்வர் முனைவர் வி.இளங்கோவன் முன்னிலை வகித்தார்.  

நெல்லை மாநகர நல அலுவலர் முனைவர் பொற்செல்வன் தலைமையேற்று தலைமையுரை வழங்கினார்.  அவர் உரையில் கீழ்க்கண்ட டெங்கு ஒழிப்பு கருத்துக்களை விளக்கினார்.; மாணவ மாணவியர் தங்கள் வீடுகளில் தண்ணீர் தொட்டிகளை 5 நாட்களுக்கு ஒருமுறை நன்றாக தேய்த்து கழுவ வேண்டும்.  நீர்த்தேக்கி வைக்கும் பாத்திரங்கள் மற்றம் டிரம்களை கொசு புகாமல் நன்றாக மூடி வைக்க வேண்டும்.  காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் சுயமாக மாத்திரை வாங்கி உண்ணுவதை தவிர்த்து உடனே மருத்துவரை அணுக வேண்டும் என தெளிவுபடுத்தினார். 

சுகாதார அலுவலர் திரு.அரசகுமார் அவர்களும் டெங்கு காய்ச்சலை தடுக்கும் முறைகளை குறித்து விவரித்தார்.  இது தொடர்பான காணொளி காட்சிகள் மாணவர்களுக்கு காண்பிக்கப்பட்டன. மாணவ மாணவியருக்கு இந்த விழிப்புணர்வு கருத்தரங்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.  கல்லூரியின் நாட்டு நலத்திட்ட அலுவலர் பேராசிரியர் சதீஷ் நன்றியுரை வழங்கினார்.  இக்கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை  கல்லூரி நிர்வாக அதிகாரி எஸ்.கிருஷ்ணகுமார் சிறப்பாக செய்திருந்தார்.

No comments:

Post a Comment