ஜி.எஸ்.டி. வரியை 18 சதவீதமாக குறைக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புதலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் சனிக்கிழமையன்று நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது... ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு சேவை வரியால் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த வரியால் 40 சதவீதம் வியாபாரம் குறைந்துள்ளது. ஊதுபத்திபோன்றவைகளுக்கு ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டுள்ளது. அரிசி, பர்னிச்சர் போன்ற பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும். ஒட்டு மொத்தமாக ஜி.எஸ்.டி. வரியை 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்க வேண்டும். பழைய இரும்பு, பிளாஸ்டிக், அலுமினியம் போன்றவற்றுக்கும் வரியை குறைக்க வேண்டும். இந்த ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் உள்நாட்டு வணிகத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பு தொடர்பாக வருகிற 18 மற்றும் 19ந் தேதிகளில் சூரத்தில் அகில இந்திய மாநாடு நடக்கிறது. இதில் ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு எதிராக போராட்டம் நடத்துவது, வணிகர்கள் கடை அடைப்பு போராட்டம் நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர்கூறினார்.
முன்னதாக அவர் நெல்லை டவுன் வியாபாரிகள் நலச்சங்க கூட்டத்தில் கலந்து கொண்டார். அந்த கூட்டத்துக்கு சங்க தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். செயலாளர் வெங்கட்ராமன், பொருளாளர் மீரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத்தலைவர் ஸ்டீபன் பிரேம்குமார் அனைவரையும் வரவேற்றார்.
கூட்டத்தில், நெல்லை மாநகரில் சுகாதாரத்தை மேம்படுத்தி வரும் மாநகராட்சி ஆணையாளர் சிவசுப்பிரமணியனுக்கு பாராட்டு தெரிவித்தும், ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்குஅளிக்கப்பட்டிருக்கும் உச்ச வரம்பு தொகையை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாக உயர்த்தவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துணைச் செயலாளர் பகவதி ராஜன் நன்றி கூறினார்.
செய்தி மற்றும் படம்
திரு. முத்து.

No comments:
Post a Comment