மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Thursday, 28 September 2017

ரோட்டராக்ட் சங்கம் நிறுவும் விழா



சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் ரோட்டராக்ட் சங்கம் நிறுவும் விழா


 பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் ரோட்டரி சங்கத்தின் ஆதரவின்பேரில் துவக்கப்பட்டுள்ள ரோட்டராக்ட் என்ற சங்கத்தை நிறுவும் விழா இன்று (27.09.2017) காலை நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் மு. முஹம்மது சாதிக் அவர்கள் தலைமையேற்றுத் தலைமையுரையாற்றினார்.

 ரோட்டரி சங்கத்தின் தலைவர் எஸ். உலகுராஜ் அவர்கள் துவக்கவுரையாற்றினார். ரோட்டராக்ட் சங்கத்தின் தலைவராக இரண்டாமாண்டு கணிதவியல் துறை மாணவர் சூர்யாவும், செயலாளராக முதலாமாண்டு கணிதவியல் துறை மாணவர் ஜமாலுதீனும்;, துணைத் தலைவராக இரண்டாமாண்டு கணிதவியல் மாணவி பாத்திமா அப்ரினும், இணைச் செயலாளராக இரண்டாமாண்டு கணிதவியல் மாணவி அமீர் ஷீபா செரினும் பொருளாளராக முதலாமாண்டு கணிதவியல் மாணவர் மதனும் பொறுப்பேற்றனர். 


அரசுதவி பெறாப் பாடங்களின் இயக்குநர் ஏ. அப்துல் காதர் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாவட்ட உதவி ஆளுநர் முகம்மது யூசுப் ராஜா அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். 


ரோட்டராக்ட் சங்கத்தின் ஆலோசகர் பேரா. எம். ஹிமாயா ஜலீலா பேகம் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

 நிகழ்ச்சியின் இறுதியில் ரோட்டராக்ட் சங்கத்தின் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

No comments:

Post a Comment