இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்டம் சார்பில் மேலப்பாளையம் பஜார் திடலில் ஞாயிற்றுகிழமையன்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்பாட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ.கோதர்மைதீன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாட்டப்பத்து முகமதுஅலி முன்னிலை வகித்தார். வட்ட தலைவர் மீரான் மைதீன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
பர்மாவில் முஸ்லிம்கள் ராணுவத்தினால் படுகொலை செய்யப்படுவதை கண்டித்தும், இந்தியா திரும்பும் முஸ்லிம்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மீரான், அப்துல்காதர், முகமதுஜாகிர், கடாபி, இஸ்மாயில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி மற்றும் படம்
திரு. முத்து.

No comments:
Post a Comment