பாரதியாரின் 96வது நினைவு நாள் - அவரது சிலைக்கு பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை
செலுத்தினர்.
மகாகவி பாரதியாரின் 96 வது நினைவு நாளில் நெல்லை சந்திப்பில் உள்ள பாரதியார் சிலைக்கு பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து
மரியாதை செலுத்தினர். மேலும் மதிதா இந்து மேனிலை பள்ளியில் பாரதியார் பயின்ற
வகுப்பறையினை நெல்லை மாநகரில் உள்ள பள்ளி மாணவ மாணவிகள் பார்வையிட்டு நெகிழ்ச்சியுடன்
சென்றனர்.
மதிதா பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பேச்சு போட்டி நடைபெற்றது. போட்டியில்
வெற்றி பெற்ற மாணவி தீபலெட்சுமி, ராஜம் ஆகியோருக்கு பரிசுகளை ஆசிரியர் சொக்கலிங்கம்
வழங்கினார். முன்னதாக பள்ளியில் தலைமையாசிரியர் வேல்முருகன், ஒவிய ஆசிரியர்
சொக்கலிங்கம், தமிழாசிரியர் சிவசங்கர் ஆகியோர் முன்னிலையில் பாரதியார் நினைவு
கவிதாஞசலி நடைபெற்றது.
பள்ளி வளாகம் முன் உள்ள பாரதியார் சிலைக்கு தமிழ்மாநில
காங்கிரஸ் நெல்லை மத்திய மாவட்ட தலைவர் சுத்தமல்லி முருகேசன் மற்றும் பாரதிய ஜனதா
கட்சியினர், அகில பாரத பிராமணர் சங்கம் மேலும் பல்வேறு அமைப்பினர் பாரதியார்
சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
No comments:
Post a Comment