மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Tuesday, 12 September 2017

திருச்சியை அலங்கரித்த கே.ஜி மகாதேவா நினைவு சிறுகதைப் போட்டி திருவிழா.




தனித்துவமான அடையாளம் மிக்கவர் கே.ஜி மகாதேவா நினைவு சிறுகதைப் போட்டி பரிசளிப்பு விழாவில் புகழாரம்சூட்டினார் இலங்கை எழுத்தாளர் அந்தனிஜீவா.

பத்திரிக்கையாளர் கெ.ஜி.மாகாதேவா நினைவு சர்வதேச சிறுகாதப் போட்டி 2017 பரிசளிப்பு விழா திருச்சியில் சிறப்பாக நடைபெற்றது. இலங்கை தினக்குரல்ஞாயிறு பதிப்பு ஆசிரியர் பாரதிராஜனாயகம் தலைமையில் நடந்த இந்நிகழுவுக்கு இலக்கிய ஆர்வலர் நோர்வே மோகன் நடராஜன் முன்னிலை வகித்தார்

சிறுகதைப்போட்டியில் வெற்றி பெற்றவர்களை வாழ்த்தியதோடு மகாதேவாவுடனான  நட்பின் நெகிழ்வை மிக அழகாக பதிவு செய்தார் எழுத்தாளர் அந்தநிஜீவா. இவர் பேசும்போது மகான் என்று அன்பொடு அழைக்கப்பட்ட மகாதேவா தனக்கென்று ஒரு தனிப்பாணியுடன் எழுதிதுத் துறையில் கால்பதித்து வாசகர்களை தன் வயப்படுத்திக்கொண்டவர் எழுததுத்ததுறையில் சாதிக்க முன்வருபவார்களை கைக் கொடுத்து வழிகாட்டி வளர்த்து விடுபவர் ஈழதில் கடுமையான நெருக்கடி காலங்களில்கூட துணிசலாக எழுதியவர் இப்படியான ஒரு சிறந்த பத்திரிகையாளாரின் நினைவாக சிறுகதைப்போட்டி நடத்துவது பெருமையாக இருக்கிறது எனக் குறிப்பிட்டார்


மேலும் இலங்கை எழுத்தாளர் கலாபூசணம் மு சிவலிங்கம் சிறுகதைகள் குறித்து பேசும்போது சிறுகதைகள் எதார்த்தமாக எழுதப்பட வேண்டும் எழுத்தில் எதையும் வழிந்துத் திணிக்கக்கூடாது ஒவ்வொறு வார்த்தையும் முக்கியமானதாக ஆவதானித்து எழுதவேண்டும்,கதையின் நோக்கம் என்ன? களம் என்ன? தீர்வு என்ன என்பதை சரியாக சொல்லப்படவேண்டும் என்று சிறுகதையின் முக்கியத்துவம் குறித்து பேசினார் 

பரிசுபெற்ற மூன்று கதைகள் குறித்து கதையும் களமும் என்றதலைய்ப்பில் முனைவர் கி சுமதி பல எழுத்தாளர்களின் சிறுகதைகளை மேற்கோள் காட்டி பரிசுப்பேற்ற கதைகள் குறித்து ஆவுரை நிகழ்த்தினார்

போட்டியில் பரிசுப்பேற்ற கதைகளின் தொகுப்பான நினைவுப் பகடைகள் சிறுகதை நூலை திருச்சி பாட்சா பிரியாணி சென்டர் உரிமையாளர் ஆபுபக்கர் சித்திக் பெற்றுக்கொண்டார் முதல் பரிசு பெற்ற பவித்ரா நந்தக்குமார் இரண்டாம் பரிசு பெற்ற கமலவேலன் மூன்றாம் பரிசுப்பேற்ற உமாகால்யாணி மற்றும் ஆறுதல் பரிசுப்பேற்ற அணையவரும்  பரிசுகளை பெற்றுக்கொண்டனர். முன்னதாக நந்தவனம்சந்திரசேகரன் அனைவரையும் வரவேற்று நிகழ்ச்சியய் சிறப்பாக ஒருங்கிணைத்தார் இறுதியாக மகாதேவாராஜ்குமார்  அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்

No comments:

Post a Comment