மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Friday, 29 September 2017

ஸ்ரீபிரம்மஜோதி ஆண்டவர் பிறந்த நாள் மற்றும் நெல்லை ஐ.டி.எப்.சி பாரத் லிமிடெட்டின் ஆண்டு விழா.





ஸ்ரீபிரம்மஜோதி ஆண்டவர் பிறந்த நாள் மற்றும் நெல்லை ஐ.டி.எப்.சி பாரத் லிமிடெட்டின் ஆண்டு விழாவை  முன்னிட்டு நெல்லை ஐ.டி.எப்.சி பாரத் லிமிடெட்டின்  நிறுவனர் தேவராஜ் ஆசியுடன் நெல்லை டவுண் கருப்பந்துறை ஸ்ரீபிரம்மவித்தைஅத்யாசி சுவாமிகள் ஜீவசமாதியில்  அன்னதானம் வழங்கப்பட்டது.

ஐ.டி.எப்.சி பாரத் லிமிடெட்டின்நெல்லை மண்டல மேலாளர் ஸ்ரீவட்சன் தலைமையில்   அன்னதானம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 


இந்நிகழ்ச்சியில் பகுதி மேலாளர் பிரபாகரன்,   கிளை மேலாளர் முத்துகிருஷ்ணன், துணை கிளை மேலாளர்கள் பொன்னுசாமி,  அருண் மற்றும் கிளை கணக்காளர்கள்  நிர்மல்,  அருண், தணிக்கை   துறையினர்  சந்தானம், முத்துகுமார், கிளை  பணியாளர்கள்,      உறுப்பினர்கள் உட்பட  பொது  மக்கள்    திரளாக    அன்னதான   நிகழ்ச்சியில்   கலந்து கொண்டனர்.



செய்தி மற்றும் படம் 
திரு.முத்து.


No comments:

Post a Comment