மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Thursday, 14 September 2017

நெல்லையில் அண்ணா விரைவு சைக்கிள் போட்டி நடைபெற்றது.



திருநெல்வேலி அண்ணா விளையாட்டரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருநெல்வேலி பிரிவின் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளினையொட்டி அண்ணா விரைவு சைக்கிள் போட்டிகள் இன்று (15.09.2017) நடைபெற்றது. அண்ணா விரைவு சைக்கிள் போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி  அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இப்போட்டிகள் 13 வயது, 15 வயது மற்றும் 17 வயது என மூன்று பிரிவுகளாக ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நடத்தப்பட்டது. ஆண்களுக்கான போட்டிகள் 15 கி.மீ. மற்றும் 20 கி.மீ. தூரமும், பெண்கள் பிரிவில் 10 கி.மீ. மற்றும் 15 கி.மீ. தூரமும் போட்டிகள் நடத்தப்பட்டது. 

விரைவு சைக்கிள் போட்டியானது அண்ணா விளையாட்டு மைதானத்தில் துவங்கி, மாநகராட்சி ஆணையாளர் பங்களா, டிஐஜி பங்களா வழியாக திருச்செந்தூர் சாலை, விஎம்சத்திரம், புவி ஈர்ப்பு மையம் வழியாக சென்று அதே பாதையில் திரும்பவும் அண்ணா விளையாட்டு அரங்கினை வந்தடைய வேண்டும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பெறுபவர்களுக்கு பதக்கங்களும், முதல் பத்து இடங்களை பெறுபவர்களுக்கு தகுதிச் சான்றிதழ்களும் வழங்கப்படும்.


இந்நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் திரு.வீரபத்திரன், பயிற்றுநர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment