பாளை.
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் சிறப்புச் சொற்பொழிவு.
பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித்
தமிழ்த்துறையின் சார்பில் பல்கலைக்கழக நதிநல்கைக்குழு நிதியுதவியோடு கவிதை தொடர்பான
சிறப்புச் சொற்பொழிவு (27.09.2017) காலை
10 மணிக்கு நடைபெற்றது. கல்லூரி முதல்வர்
முனைவர் மு. முஹம்மது சாதிக் அவர்கள் தலைமையேற்றுத் தலைமையுரையாற்றினார்.
கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் ச. மகாதேவன்
வரவேற்றுப் பேசினார். அரசுதவி பெறாப் பாடங்களின் இயக்குநர் ஏ. அப்துல் காதர்
முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக ‘தை’ இலக்கிய
இதழின் ஆசிரியர் பாவலர் அறிவுமதி அவர்கள் கலந்துகொண்டு, ‘கவிக்கோ என்கிற கவிதைத் தாய்’ எனும் தலைப்பில் சிறப்புரையாற்றும்போது,
தமிழ் நம் அடையாளம்
“தமிழ் நம் அடையாளம். தமிழ்க் கவிதைகள் தடையாள
நமக்கு கற்றுத் தருகின்றன. உலகளாவிய மொழியான தமிழ் இன்றைக்கு இளந்தமிழாய் மாணவர்
மனதில் வீற்றிருக்கிறது. மாணவர்களுக்குள் கவிஞர்கள் இருக்கிறார்கள், பாடலாசிரியர்கள் இருக்கிறார்கள், தமிழ் இருக்கிறது. அதை வளர்த்தெடுக்க வேண்டிய கடமை
இளைய சமுதாயத்திற்கு இருக்கிறது. தமிழ் படிக்க வேண்டும் என்கின்ற தாகம் பாரதியை
கவிஞனாக்கியது. காக்கைப் பாடினியாரும் நச்சௌ;ளையாரும் கவிதை படைத்த தமிழகத்தில் பெண்கள் நிறைய
கவிதைகள் எழுத வேண்டும். பெண் கல்வியைப் பெரியாரும் வ.உ.சி.யும் திரு.வி.க.வும்
பாரதியும் தொடர்ந்து வலியுறுத்தினார்கள். நெல்மணி தாண்டி, கள்ளிப்பால் தாண்டி பல தடைகளை உடைத்து இன்று
பெண்கள் பள்ளிக் கல்வியையும் உயர்கல்வியையும் பெறவேண்டியிருக்கிறது. மொழி –
சமுதாயத்தின் விழி. அதைப் பெண்கள்
தன்வசமாக்கி கவிதைகளால் தன் வாழ்வைப் படைக்க வேண்டும். உலகக்கவிஞர்களை கவிக்கோ
வாணியம்பாடி வகுப்பறைகள் மூலமாக தொடர்ந்து மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.
அவரால் உருவாக்கப்பட்ட கவிஞர்கள் இன்று தமிழ்நாட்டின் புகழ்மிக்க கவிஞர்களாக
இருக்கிறார்கள். ஹைக்கூ கவிதைகளைத் தமிழில் அறிமுகப்படுத்திய பெருமை கவிக்கோ
அப்துல் ரகுமானையே சாரும். அவருடைய பித்தன், நேயர் விருப்பம், சுட்டு விரல், ஆலாபனை ஆகிய நூல்கள் சாகா வரம் படைத்தவை. அவரால்
உருவாக்கப்பட்டவனே நான். “அறிவுமதி என்
வளர்ப்புதானே தவிர வார்ப்பு இல்லை” என்று கவிக்கோ
பெருமை பொங்கக் கூறியிருக்கிறார். உயிர் நேயத்தையும், மனிதத்தையும், மதங்கள் கடந்த ஒற்றுமையையும் கவிக்கோ காலம்
முழுக்கச் சொல்லிக்கொண்டே இருந்தார். மாணவர்களுக்குள் இருக்கும் படைப்புத் திறனை
அவர் வெளியே கொண்டு வந்தார். அவரைப்போன்று இக்கல்லூரித் தமிழ்த்துறை மாணவ
மாணவியரின் ஆயிரக்கணக்கான கவிதைகளைத் தொகுத்து நான்கு கவிதைத் தொகுதிகளாக
வெளியிட்டிருப்பது பாராட்டிற்குரியது. வரும் ஆண்டில் அக்கவிதைகளை நூலாக்க நானும்
உதவுகிறேன்” என்று பேசினார்.
அதைத் தொடர்ந்து மாணவிகளின் கருத்துரை இடம்பெற்றது.
தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் அ.மு. அயூப்கான்,
உதவிப் பேராசிரியர்கள் அ.சே. சேக் சிந்தா,
அனுசுயா, குமார், சாதிக்
அலி, ஜிதேந்திரன், மஜிதா பர்வீன் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தனர். நிகழ்ச்சியின் இறுதியில் தமிழ்த்துறை இணைப்
பேராசிரியர் அ.மு. அயூப்கான் அவர்கள் நன்றி கூறினார்.

No comments:
Post a Comment