மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Sunday, 10 September 2017

பாளையில் சகோதரர்கள் கல்விக்கழகத்தின் பவளவிழா





பாளையில் சகோதரர்கள் கல்விக்கழகத்தின் பவளவிழா தொடங்கியது. இயேசுவின் திருஇருதய சபையின் சகோதரர்கள் கல்வி சங்கம் 75 ஆண்டுகளாக கல்விப்பணியில் ஈடுபட்டு வருகிறது.

இந்த அமைப்பு தமிழகத்தில் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இயங்கி வருகிறது. அமைப்பின் பவளவிழா  பாளை கிறிஸ்துராஜா  மேனிலைப்பள்ளி வளாகத்தில்   தொடங்கியது.  இரண்டாவது நாளன்று நடைபெற்ற விழாவில் சபை அதிபர் விக்டர்தாஸ் தலைமை தாங்கினார்.  பவளவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

யூனியன் செயலர் ஆரோக்கியபீட்டர் அனைவரையும் வரவேற்றார். பணகுடி திருஇருதய மேனிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கஸ்பார்  யூனியன் வரலாற்றை எடுத்துரைத்தார். கௌசானல் மாநில அதிபர்  அந்தோணிசாமி வாழ்த்தி பேசினார் மாணவ-மாணவிகளின்  கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

மாநில அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் வெற்றி  பெற்றவர்களுக்கு பரிசளிப்புவிழா நடைபெற்றது.  சவேரியார்   கல்லூரி போராசிரிர் பிரதர்ஸ் யூனியனின் கல்வி சேவையை பாராட்டி பேசினார்.  டாக்டர் பிரேமச்சந்திரன் மற்றும் பிரதர்ஸ் யூனியன்  பணியாளர்கள்  150க்கும் மேற்பட்டோர் தங்களது குடும்பத்துடன் இந்த  பவள   விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment