பாளை
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் நாட்டுநலப்பணித்
திட்டத்தின் சார்பில் டெங்கு விழிப்புணர்வு முகாம்.
பாளை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின்
நாட்டுநலப்பணித் திட்டமும் “சீடு” (SEED) அறக்கட்டளையும்
இணைந்து டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் இன்று (21.09.2017) நடத்தியது. கல்லூரியின் முதல்வர் முனைவர் மு.
முஹம்மது சாதிக் அவர்கள் நிகழ்ச்சிக்குத் தலைமைத் தாங்கினார். நாட்டு
நலப்பணித்திட்ட அலுவலர் பேரா. சாகுல் ஹமீது அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.
சீடு அறக்கட்டளையின் நிறுவனர் மருத்துவர்
பொன்னம்பலம் அறிமுகவுரையாற்றினார். சித்த மருத்துவர் வனிதா சங்கர் அவர்கள் டெங்கு
காய்ச்சலில் இருந்து தவிர்ந்துகொள்வது எப்படியென்றும் எவ்வாறு நல்ல உணவுகளை
எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் சிறப்புரையாற்றினார். கல்லூரியின் அரசுதவிபெறாப்
பிரிவுகளின் இயக்குநர் முனைவர் ஏ. அப்துல் காதர் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் மருத்துவர் டி. ராஜாசங்கர், ஜி. ராஜாசங்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினராக
கலந்துகொண்டனர்.
இருநூறுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியருக்கு
நிலவேம்பு கஷாயம் விநியோகிக்கப்பட்ட இந்நிகழ்வினை நாட்டு நலப்பணித் திட்ட அலுவர்
பேரா. ஜெமி மெர்லின் ராணி தொகுத்து வழங்கினார், பேரா. பிரேமலதா நன்றியுரையாற்றினார். நிகழ்ச்சிக்கான
ஏற்பாடுகளை பேரா. ஜெஸ்லின் கனக இன்பா, பேரா.
முகைதீன் அப்துல் காதர், பேரா. யஹ்யா
ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
செய்தி மற்றும் படம்
திரு. சரவணவேல்.

No comments:
Post a Comment