மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Thursday, 21 September 2017

காலத்தின் குரல்” எனும் புத்தக வெளியீட்டு விழா நடந்தது.




பேராசிரியர் சௌந்தர மகாதேவன் எழுதிய கலை இலக்கிய கட்டுரைகள் மற்றும் கடிதங்களின் தொகுப்பு நூலான  “காலத்தின் குரல்” பாளையங்கோட்டை சைவசபையில் வெளியீடு.

பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணிபுரியும் பேராசிரியர் சௌந்தர மகாதேவன், எழுதியுள்ள இலக்கியக் கட்டுரைகளையும்,    கலை, இலக்கியம் வாழ்வியல் சார்ந்த 157 கடிதங்களையும் திருநெல்வேலி மகாபாரதி பதிப்பகத்தின் மூலம்  தொகுத்து “ காலத்தின் குரல்” எனும் தலைப்பில் 324 பக்கங்களில் நூலாகத் தயாரித்துள்ளார்.


வெளியீட்டுவிழா

பாளையங்கோட்டை சைவசபையில் 20.9.2017 புதன்கிழமை மாலை 6 மணியளவில் “மேலும்” இலக்கிய அமைப்பும் “மேலும்” வெளியீட்டகமும் இணைந்து நடத்திய இலக்கிய நிகழ்வில் அதன் வெளியீட்டுவிழா நடைபெற்றது.

அமைப்பின் தலைவர் பேராசிரியர் வே. கட்டளை கைலாசம் வரவேற்றுப் பேசினார். மேலும் சிவசு தலைமை வகித்துத் தலைமையுரையாற்றினார். வரலாற்று ஆய்வாளர் செ.திவான், எழுத்தாளர் நாறும்பூநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் சிறப்புவிருந்தினராக பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி முதல்வர் மு.முகமதுசாதிக் கலந்துகொண்டு “ காலத்தின் குரல்” நூலை வெளியிட பேராசிரியர் சிவசு அதன் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார். வரலாற்று ஆய்வாளர் செ.திவான், எழுத்தாளர் நாறும்பூநாதன், வே.கட்டளை கைலாசம் ஆகியோர் அந்நூலின் அடுத்தடுத்த பிரதிகளைப் பெற்றுக் கொண்டனர். பேராசிரியர் சௌந்தர மகாதேவன் ஏற்புரை வழங்கினார்.


“மேலும்” இலக்கியக் கருத்தரங்கம்

தொடர்ந்து “மேலும்” இலக்கிய அமைப்பின் நவீன இலக்கியக் கருத்தரங்கம் நடைபெற்றது.

முதல் அமர்வில் பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் இரண்டாமாண்டு தமிழிலக்கிய மாணவர் த.முத்தரசன், ப்ரியா பாபுவின் மூன்றாம் பாலின் முகம் எனும் நாவலைத் திறனாய்வு செய்து உரையாற்றினார்.


பெண்குரல்கள்

இரண்டாம் அமர்வில் பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறைத்தலைவர் பேராசிரியர் சௌந்தர மகாதேவன், நவீனக் கவிதைகளின் பெண்குரல்கள்” எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். அவர் தமது சிறப்புரையில், “ சங்ககாலப் பெண்பால் புலவர்களுக்கு நிகரான பெண்குரல்கள் நவீனத்தமிழ் இலக்கியக் கவிதைகளில் காணக்கிடைகின்றன. எளிய சொற்களின் வழியே அவர்கள் உணர்த்தும் மகத்தான அனுவங்கள் வெகுநுட்பமாய் உள்ளன” என்று கூறி பெருந்தேவி,அனார், தமிழ்நதி, மனுஷி,தேன்மொழி தாஸ், உமாமகேஸ்வரி,பாலைவன லாந்தர்,சசிகலா பாபு,கனிமொழிஜி போன்ற கவிஞர்களின் கவிதைகளைச் சான்று காட்டி விளக்கினார்.

மூன்றாம் அமர்வில் பேராசிரியர் மேலும் சிவசு, எழுத்தாளர் தமிழவனின் புதிய நாவலான “ஆடிப்பாவை”யை மையமிட்டு  “அகப்புறப் பாவியமும் ஆடிப்பாவைபோலவும்” எனும் தலைப்பில் சிறப்புரையாற்றும் போது,
“இப்போது தமிழில் எழுதும் சில இளம்படைப்பாளர்கள் தமிழ் மரபுகளை அறியாமல் எழுதுகின்றனர்.

ஆழ்ந்த தமிழ் மரபின் நவீனத் தொடர்ச்சி நாமென்று அவர்கள் அறிந்து எழுதுதல் அவசியம். சங்க இலக்கியம் மரபின் பெட்டகம். எழுத்தாளர் தமிழவனின் புதிய நாவலான ஆடிப்பாவை சங்கஇலக்கிய அகப்புறப் பாடல் அமைப்பு மரபில் எழுதப்பட்டுள்ளது. படைப்பு என்கிற சிலைக்குக் கண் திறப்பவர்கள் வாசகர்கள்தான்.

வாசிப்பின் மூலம் வாசகன் படைப்பின் ஊற்றுக்கண்ணைத் திறக்கிறான். இந்தப் புதினத்தை அகம் புறம் என்கிற இருநிலைகளில் வாசித்து உள்வாங்கலாம். இந்த நாவல் பாளையங்கோட்டையிலும் தமிழகத்தின் பிறபகுதிகளிலும் 1965 இல் நடைபெற்ற இந்திமொழிக்கு எதிராக மாணவர்கள் நடத்திய மொழிப்போர் குறித்துப் பேசுகிறது. மாணவர்களை அரசியல் சிந்தனையாளர்களாக மாற்றாமல் அரசியல் பேச்சாளர்களாக மாற்றி தங்களுக்குச் சாதகமாக மாற்றியவர்களை நாவல் ஆழமாகச் சுட்டுகிறது.” என்று பேசினார்.

சுரண்டை அரசுக் கல்லூரித் தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் ரமேஷ் நன்றி கூறினார். விழாவுக்கான ஏற்பாடுகளை மேலும் இலக்கிய அமைப்பும் மேலும் வெளியீட்டகமும் இணைந்து செய்திருந்தன.



No comments:

Post a Comment