மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Tuesday, 12 September 2017

தச்சை வேதிக் வித்யாஷ்ரம் பள்ளியில் பழங்குடியினர் தின விழா.



தச்சை வேதிக் வித்யாஷ்ரம் பள்ளியில் பழங்குடியினர் தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. மழலையர்கள் பழங்கால இனத்தவர்களைப் போன்று இலை தழைகளை ஆடையாக அணிந்துகொண்டு சிறப்பித்தனர்.


இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் செந்தில்பிரகாஷ், இயக்குநர் திலகவதி ஆகியோர் தலைமை வகித்தனர். பள்ளி முதல்வர் சோமசுந்தரி முன்னிலை வகித்தார். பள்ளி இயக்குநர் கூறும்போது மனித இனத்தவர்களில் இவர்களும் உண்டு விஞ்ஞான அடிப்படையில் நாம் வளர்ச்சியடைந்தாலும் காடுகளில் வாழுகின்றவர்கள் விஞ்ஞான ரீதியில் மிகவும் முன்னோடியாக திகழ்கின்றனர். எந்தவொரு கருவிகளும் இன்றி காடுமேடுகளிலும் வாழ்ந்து வருகின்ற பழங்குடியினர் இன்றைக்கு யாரும் கவனிப்பாரின்றி அவர்களின் வாழ்வாதாரம் உள்ளது. அவர்களை நினைவுப்படுத்தும் விதமாக நாம் இத்தகைய விழாவினை கொண்டாடி வருகின்றோம்;. ஆகவே நாம் அனைவரும் அவர்களுக்கு உதவிகள் போன்றவை செய்யவேண்டும் என்றார்.


விழாவில் பள்ளி மேலாளர் செல்வராஜ், ஒருங்கிணைப்பாளர் முருகேஸ்வரி மற்றும் மாணவ மாணவியர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment