பாளை யுவராஜ் சமுதாய கல்லூரி ஸ்ரீசக்தி மருத்துவமனை இணைந்து இலவச மருத்துவ முகாம் பாளை சவுராஷ்டிரா பவனத்தில் நடைபெற்றது.
பாளை யுவராஜ் சமுதாய கல்லூரி முதல்வர் எஸ்.வி.கணேஷன் வரவேற்புரையாற்றினார். மாவட்ட நீதிமன்ற கோவிந்தராஜ் தலைமை வகித்தார். மதிதா இந்து கல்லூரி தமிழ்துறை பேராசிரியர் சுந்தரம் சிறப்புரை ஆற்றினார்.
இம்முகாமில் பல்வேறு எலும்பு மூட்டு தேய்மானம், முதுகுவலி, தண்டுவடம், குதிங்கால் வலி, எலும்பு முறிவு சிகிச்சை அளிக்கப்பட்டது. பெண்கள் சம்பந்தமான சகல நோய்களுக்கும் மகப்பேறு சிகிச்சையும் இலவச ஆலோசனை அளிக்கப்பட்டது.
இம்முகாமில் மருத்துவர்கள் வெங்கடேஷ்பாபு, சுமதி ஆகியோர் சிகிச்சை மேற்கொண்டனர். இம்முகாமில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்று பயனடைந்தனர்.
செய்தி மற்றும் படம்
திரு. முத்து.
No comments:
Post a Comment