மேலப்பாளையம் அன்னை ஹாஜிரா பெண்கள்
கல்லூரியில் இஸ்லாமியத்தமிழ் புத்தக வெளியீடு-மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்.
மேலப்பாளையம் அன்னை ஹாஜிரா பெண்கள்
கல்லூரி, மேலப்பாளையம் நலம் விரும்பிகள் சங்கம், திருநெல்வேலி
மாவட்ட சிவில் இன்ஜினியர்கள் சங்கம் இணைந்து பாராட்டு விழா மற்றும்
இஸ்லாமியத்தமிழ் எனும் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.
விழாவில் அஸ்ஸாதிக்
கல்வி கூட்டமைப்பு தலைவர் செய்யது அகமது தலைமை தாங்கி பேசினார். அன்னை ஹாஜிரா
பெண்கள் கல்லூரி தாளாளர் குதாமுகம்மது, மாவட்ட சிவில் இன்ஜினியர் சங்க தலைவர்
செய்யது முகம்மது புகாரி, மேலப்பாளையம் நலம் விரும்பிகள் சங்கம் துணைத்தலைவர்
அப்துல் முத்தலிப், அஸ்ஸாதிக் கல்வி கூட்டமைப்பு உறுப்பினர்கள் நிஜாமுத்தீன்,
காதர் முகம்மது, ஹனி முகம்மது, கவுஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அஸ்ஸாதிக் கல்வி
கூட்டமைப்பு பொருளாளர் ஜாபர்சாதிக் அனைவரையும் வரவேற்று பேசினார். மேலப்பாளையம்
நலம் விரும்பிகள் சங்கம் தலைவரும் மூத்த பத்திரிகையாளருமான ஹசன்
அறிமுகவுரையாற்றினார். இஸ்லாமியத்தமிழ் புத்தகத்தை மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி
வெளியிட மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர் பெற்றுக்கொண்டார்.
திருநெல்வேலி மாநகராட்சியினை
மாநிலத்தில் முதன்மை மாநகராட்சியாக உருவாக்கியமைக்காக தமிழக முதல்வரிடம் விருது
பெற்ற மாநகராட்சி ஆணையாளர் சிவசுப்பிரமணியன், பல்வேறு சமூக சேவைகளில் முனைப்புடன்
செயல்பட்டு தமிழக முதல்வரிடம் விருது பெற்ற திருநெல்வேலி ராணி அண்ணா மகளிர்
கலைக்கல்லூரி இலக்கியம் மூன்றாமாண்டு மாணவி ஸ்ரீபதிதங்கம், சிறப்பு பயிற்சிக்காக
தமிழகத்திலிருந்து ஜெர்மன் தூதரகம் மூலம் தேர்வு செய்யப்பட்ட வடிவமைப்பு பொறியாளர் அஜ்மல்ஹசன் ஆகியோர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கலந்துகொண்டு ஆய்வுக் கட்டுரை புத்தகத்தை வெளியிட்டு, பாராட்டு மற்றும் விருதுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லூரி முதல்வர் ரஜப்பாத்திமா, ராணி அண்ணா மகளிர் கல்லூரி முதல்வர் மைதிலி, சாயர்புரம் போப் கல்லூரி முதல்வர் செல்வகுமார் ஆகியோர் இவ்விழாவில் பாராட்டி பேசினார்கள். மேலும் அண்ணா பல்கலைக்கழக டீன் சக்திநாதன், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லூரி முதல்வர் ரஜப்பாத்திமா, ராணி அண்ணா மகளிர் கல்லூரி முதல்வர் மைதிலி, சாயர்புரம் போப் கல்லூரி முதல்வர் செல்வகுமார் ஆகியோர் இவ்விழாவில் பாராட்டி பேசினார்கள். மேலும் அண்ணா பல்கலைக்கழக டீன் சக்திநாதன், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
நெல்லை மாநகராட்சி ஆணையாளர்
சிவசுப்பிரமணியன் ஏற்புரையாற்றினார். விழா நிறைவாக அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லூரி
தமிழ்துறைத் தலைவர் ஷப்ரீன்முனீர் நன்றி கூறினார்.

No comments:
Post a Comment