மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Monday, 18 September 2017

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு.




நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது.இதுதவிர குற்றாலம், தென்காசி பகுதிகளிலும்  சனிக்கிழமையன்று  இரவு தொடங்கிய சாரல் மழை ஞாயிற்றுகிழமையன்று    பகல் முழுவதும் பெய்தது. சனிக்கிழமையன்று இரவு குற்றாலம் அருவிகளில் திடீரென்று   வெள்ளப்பெருக்கு   ஏற்பட்டது.   

இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.ஞாயிற்றுகிழமையன்று காலையில் பழைய குற்றாலத்தில் வெள்ளம் குறைந்தது. அங்கு மட்டும் சுற்றுலா  பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். 

மெயின் அருவி, ஐந்தருவிகளில் தொடர்ந்து தடைநீடித்தது. காலையில்  இருந்தே ஞாயிற்றுகிழமையன்று  முழுவதும் லேசான மழை தூறிக்  கொண்டே இருந்தது.  தற்போது சீசன் இல்லாததால்   சுற்றுலா  பயணிகளின் வருகை குறைவாக உள்ளது. எந்தவித நெருக்கடியும் இல்லாமல் பழைய குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.


No comments:

Post a Comment