பாளை.
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் இளைஞர் நலத்துறையும் தமிழ்நாடு பாண்டிச்சேரி
நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பும் (குநனஊழுவு) இணைந்து மாணவ-மாணவியருக்கான சமூக
விழிப்புணர்வு பயிலரங்கை நடத்தின. காலை
11.30 மணியளவில் தொடங்கி மாலை 3.30 மணிவரை நடைபெற்றது.
விழாவினை கல்லூரி முதல்வர் முனைவர் மு.
முகம்மது சாதிக் அவர்கள் வரவேற்புரை வழங்கி தொடங்கி வைத்தார். அரசுதவி பெறா பாடப்பிரிவுகளின் இயக்குநர் முனைவர் ஏ. அப்துல் காதர்
அவர்கள் தலைமை தாங்கினார். பயிலரங்கினை
சுயநிதிபிரிவு தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் இரா. அனுசுயா அவர்கள் தொகுத்து வழங்கினார். சுயநிதிபிரிவு தமிழ்த்துறைப் பேரா. மு. சாதிக் அலி அவர்கள்
ஒருங்கிணைத்தார்.
மாவட்ட
மகளிர் அணிச் செயலாளர் முனைவர் பேரா. தஸ்நேவிஸ் அவர்கள் தேசிய ஒருமைப்பாடு
குறித்தும், பெட்காட் சேர்மன் திரு. எஸ். செல்வராஜ் அவர்கள் நுகர்வோர் விழிப்புணர்வு
குறித்தும், திரு. க. வெங்கடாசலம் (பெட்காட் பொருளாளர்); அவர்கள்; சுற்றுச்சூழல்
பாதுகாப்பு குறித்தும், திரு. அ. பாலசுப்பிரமணியன், பொருளாளர் (திருநெல்வேலி மாவட்ட
நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கம்) மது மற்றும் போதை ஒழிப்பு குறித்தும், திரு. மாரிசாமி
(மா.நு.வி.இ) மனித நேயம் குறித்தும் மாணவ-மாணவியரிடையே உரையாற்றினார்கள்.
விழாவின் நிறைவாக கருத்துரை வழங்கிய மாணவர்களுக்கு புத்தகங்கள்
பரிசாக வழங்கப்பட்டது. பயிலரங்கில் 2-ம் ஆண்டு இளங்கலைத் தமிழ் இலக்கிய
மாணவர் த. முத்தரசன் நன்றியுரை வழங்கினார்.

No comments:
Post a Comment