மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Thursday, 28 September 2017

பாளையில் மாணவர் வாசகர் வட்ட நூல் திறனாய்வு நிகழ்ச்சி




சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மாணவர் வாசகர் வட்டம்


 பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறையும் சீதக்காதி தமிழ்ப் பேரவையும் மாணவர் பேரவையும் இணைந்து 24.09.2017 மதியம் 2 மணிக்கு கல்லூரி உரையங்கில் மாணவர் வாசகர் வட்ட நூல் திறனாய்வு நிகழ்ச்சியை நடத்தியது.  கல்லூரி முதல்வர் முனைவர் மு. முகம்மது சாதிக் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்துத் தலைமையுரையாற்றினார்.  தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ச. மகாதேவன் நூல் திறனாய்வு செய்யும் முறைமை குறித்து அறிமுகவுரையாற்றினார்.  


வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் சாகுல் ஹமீது, தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் அ.மு. அயூப் கான், தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் மஜிதா பர்வின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மாணவர் பேரவைத் தலைவர் ஜா. அகமது தமீமுல் அன்சாரி வரவேற்றுப் பேசினார்.


நூல் திறனாய்வு: 

          முதல் அமர்வில் மூன்றாமாண்டு வரலாற்றுத் துறை மாணவியும் மாணவர் பேரவையின் செயலாளருமான க. மனிஷா, தந்தை பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள்? என்னும் நூலை திறனாய்வு செய்து சிறப்புரையாற்றினார்.



          இரண்டாம் அமர்வில் இரண்டாமாண்டு தமிழ் இலக்கிய மாணவர் முத்தரசன் தமிழ் இலக்கியத்தில் சமய நல்லிணக்கம் எனும் பொருளில் திறனாய்வுரையாற்றினார்.  


          மூன்றாம் அமர்வில் மூன்றாமாண்டு வரலாற்றுத் துறை மாணவர் பேச்சிராஜ், வரலாற்று ஆசிரியர் ராமச்சந்திர குஹாவின் இந்திய வரலாறு காந்திக்குப் பின் எனும் நூல் குறித்து சிறப்புரையாற்றினார்.  அதன்பின்பு அந்நூல்கள் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.  



          அக்கலந்துரையாடலில் மாணவி சரண்யா, தாஜுன், சாதிக் ஆகியோர் பங்கேற்றுத் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர்.  அடுத்த மாணவர் வட்ட நிகழ்வுக்கான நூல்கள் தமிழ்த்துறையால் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.  மாணவ-மாணவியருக்கு வாசிக்கும் திறனை அதிகரிக்கும் பொருட்டும் சுயசிந்தனையை வளர்த்து நல்ல நூல்களைத் தெரிவுசெய்யும் பொருட்டும் மாணவர் பேரவையால் ஒவ்வொரு மாதமும் இந்நிகழ்ச்சி தொடர்ந்து நடத்தப்பட உள்ளது எனும் செய்தியை மாணவர் பேரவையின் துணைத் தலைவர் விஜய சாந்தி நிகழ்வின் போது தெரிவித்தார். தமிழ்த்துறையும் மாணவர் பேரவையும் இணைந்து இந்நிகழ்வை நடத்தியது. மாணவர் தாஜுதின் நன்றியுரையாற்றினார்.


செய்தி மற்றும் படம் 
திரு. சரவணவேல்.



No comments:

Post a Comment