பெரியார் பிறந்தநாள் விழா பாளையில் உள்ள அவரது சிலைக்கு அனைத்து கட்சிகள் மாலைஅணிவித்து மரியாதை செய்தனர்.
அதிமுக சார்பில் மாவட்ட அவைத்தலைவர் பரணிசங்கரலிங்கம், சுதாபரமசிவம், முன்னாள் எம்எல்ஏக்கள் தர்மலிங்கம், கோபால கிருஷ்ணன், பாளை பகுதி கிருஷ்ணமூர்த்தி, நெல்லை பகுதி செயலாளர் மோகன், மேலப்பாளையம் பகுதி ஹயாத் மற்றும் மகளிரணி தமிழ்செல்வி மற்றும் வழக்குரைஞர் ஜெனி எஸ்.டிகாமராஜ் எம்ஜிஆர் மன்ற துணைச்செயலளார் ஆறுமுகம் முன்னாள் கவுன்சிலர் குறிச்சிசேகர் உட்பட அதிமுகவினர் பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திமுக சார்பில் மத்திய மாவட்ட செயலாளர் அப்துல்வகாப் தலைமையில் அவைத்தலைவர் சு.ப.சீதாராமன், நெல்லை தொகுதி சட்டமன்ற உறுப்பினர்ஏ.எல்.எஸ்.சுப்பிரமணியன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் அன்பழகன், பேச்சாளர் நெல்லை ரவி, மகளிரணி ரேவதி அசோக், கவிஞர் மூர்த்தி மற்றும் திரளான திமுகவினர் கலந்து கொண்டனர்.
தேமுதிக சார்பில் மாவட்டசெயலளார் முகம்மதுஅலி, ஜெயச்சந்திரன், ஆனந்தமணி, முகம்மது ஜலில் மற்றும் தேமுதிக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்தி மற்றும் படம்
திரு. முத்து.

No comments:
Post a Comment