மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Sunday, 24 September 2017

காமன்வெல்த் போட்டியில் தங்கபதக்கம் வென்ற நெல்லை வீரருக்கு பாராட்டுவிழா.



காமன்வெல்த் வலுதூக்கும் விளையாட்டு போட்டியில் இந்தியா சார்பில் கலந்து 4 தங்கபதக்கம் வென்ற நெல்லை வீரருக்கு பாராட்டுவிழா.


தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற காமன்வெல்த் வலுதூக்கும் விளையாட்டு போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு 4 தங்கபதக்கம் வென்ற நெல்லை வீரர் ராமகிருஷ்ணன் (எ) அன்புவிற்கு நெல்லையில் பாராட்டு விழா நடைபெற்றது. 


பாராட்டு விழாவில் முன்னாள் சபாநாயகர் இரா.ஆவுடையப்பன், முன்னாள் விளையாட்டு துறை அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான், முன்னாள் எம்.எல்.ஏ மாலைராஜா, திமுக மாவட்ட அவைத்தலைவர் சு.ப.சீதாராமன், .திமுக நெல்லை பகுதி செயலாளர் கோபி (எ) நமச்சிவாயம், முன்னாள் தச்சை மண்டலத்தலைவர் சுப்பிரமணியன், தலைமை கழக செயற்குழ உறுப்பினர் வின்சர் மற்றும் உலகநாதன், பூக்கடை அண்ணாதுரை, அருண்குமார், அப்துல்கயீம், ரவி, உதயகுமார், விடி.துரை, பூல்பாண்டி, லெட்சுமணன், சந்திப்பு ராமச்சந்திரன், சிவராமலிங்கம், நாராயணன், முத்துபாண்டி, கார்டன்சேகர், மாவட்ட வலுதூக்கும் நண்பர்கள் குழுவினர் உட்பட திரளானோர் கலந்து கொண்டு வலுதூக்கும் வீரர் ராமகிருஷ்ணன் (எ) அன்புவிற்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்களை கூறினார்கள்.

செய்தி மற்றும் படம்.
திரு. முத்து.


No comments:

Post a Comment