இணையதள வழி பத்திரப்பதிவில் வில்லங்கம் செய்ய முடியாது என பதிவுத்துறை அதிகாரிகள்தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசு பதிவுத்துறையில் இணையவழி ஆவணப்பதிவு நடைமுறை தற்போது சோதனை முறையில் 51 பத்திரப்பதிவு அலுவலகங்கில் நடைபெற்று வருகிறது. இதில்நெல்லை மாவட்டத்தில் நெல்லை நகரம், தென்காசி, கடையம் ஆகிய சார் பதிவாளர் அலுவலகங்களில் இணையவழி பத்திரப்பதிவு நடைபெற்று வருகிறது.
இதன் தொடர்ச்சியாக மேலும் 51 சார் பதிவாளர்அலுவலகங்களுக்கு இந்த திட்டம் விரிவு படுத்தப்பட உள்ளது. இது தொடர்பான பயிற்சி முகாம் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் சனிக்கிழமையன்று நடைபெற்றது. பயிற்சி முகாமிற்கு நெல்லை மண்டல துணை பதிவுத்துறை தலைவர் அருள் சாமி முன்னிலை வகித்தார். இதில் நெல்லை மற்றும் சேரன்மாதேவி பத்திரப்பதிவு மாவட்ட பதிவாளர்கள், சார் பதிவாளர்கள் மற்றும் பத்திர எழுத்தர்கள், வக்கீல்கள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து பதிவுத்துறை அதிகாரிகள் கூறுகையில்... 2வது கட்டமாக வள்ளியூர், பாவூர்சத்திரம் மற்றும் அம்பை ஆகிய சார் பதிவாளர்அலுவலகங்களில் இந்த திட்டம் நடைமுறைக்கு வருகிறது. இந்த இணையதளம் வழி ஆவண பதிவுமூலம் நாள் ஒன்றுக்கு 100 பதிவுகள் வரை மேற்கொள்ளலாம். மேலும் 5 நிமிடத்தில் ஆவணப்பதிவை முடித்து விடலாம். பொது மக்கள் நேர விரயத்தை தவிர்க்க இதில் முன்பதிவும் செய்து கொள்ளலாம். போலி ஆவணப்பதிவு இதன் மூலம் தடுக்கப்படும். பதிவு செய்த ஆவணத்தின் மீது எடுக்கப்பட்ட மேல்நடவடிக்கையை தெரிந்து கொள்ளலாம்.
மேலும் ஒரு சொத்தில் யாரேனும் வில்லங்கம் செய்யமுடியாது. அவ்வாறு செய்தால் சொத்தின் உரிமையாளருக்கு அதுபற்றி செல்போன் குறுந்தகவல் மூலம் தகவல் தெரிவிக்கப்படும். பத்திரப்பதிவு மற்றும் அனைத்து வகையான திருமணங்கள் பதிவு ஆகியவற்றுக்கான வில்லங்க சான்று, சான்றிட்ட நகல் ஆகியவற்றை இணையதளம் வழி மூலம் பெறவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றனர்.
செய்தி மற்றும் படம்
திரு. முத்து.
செய்தி மற்றும் படம்
திரு. முத்து.

No comments:
Post a Comment