சூரியன் குஆ-லிருந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஜூனியர் சீனியர்
நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. அது தொடர்பாக சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் இளைஞர்
நலத்துறையும் சூரியன் எப்.எம். பண்பலையும் இணைந்து 22.09.2017 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.30 மணிக்கு கல்லூரி உரையரங்கில் முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு
மாணவிகளுக்கான கவிதைப் போட்டிகளை நடத்தியது.
இதில் பல மாணவர்கள் பங்கேற்று தங்கள்
கலைத் திறமைகளை வெளிப்படுத்தினார்கள். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கல்லூரியின்
பொறுப்பு முதல்வர் முனைவர் எம். கமாலுதீன், அரசுதவிபெறாப் பாடப்பிரிவுகளின் இயக்குநர் முனைவர் ஏ. அப்துல் காதர்,
தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ச. மகாதேவன்,
இளைஞர் நலத்துறை ஒருங்கிணைப்பாளர் பேரா. அ.மு.
அயூப்கான் மற்றும் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் எஸ். சேக் சிந்தா ஆகியோர்
பரிசுகளை வழங்கிப் பாராட்டினர்.
செய்தி மற்றும் படம்
திரு. சரவணவேல்.

No comments:
Post a Comment