மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Monday, 18 September 2017

சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மாநில அளவிலான மொழித்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம்




பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மாநில அளவிலான மொழித்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் 15.09.2017 காலை 10 மணியளவில் கல்லூரி உரையரங்கில் வைத்து நடைபெற்றது. 

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் மு. முகம்மது சாதிக் முன்னிலை வகித்தார்.  அரசுதவி பெறாப் பாடப்பிரிவுகளின் இயக்குநர் முனைவர் ஏ. அப்துல் காதர் வாழ்த்துரை வழங்கினார்.  தமிழ்த்துறை பேரா. மு.ரா. மஜிதா பர்வீன் வரவேற்றார். நிகழ்ச்சி நான்கு அமர்வுகளாக நடைபெற்றது.

 சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க நெல்லை மாவட்ட செயலாளர் திரு. நாறும்பூநாதனும், அன்னை ஹாஜிரா மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் திரு. ஷப்ரீன் முனீரும், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் துறைப் பேரா. முனைவர். பா. குமரேசனும், விருதுநகர் வி.எச்.என். செந்தில் குமாரர் நாடார் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் க. ஸ்ரீதர் அவர்களும் கலந்து கொண்டு தமிழ்மொழி தொன்மையானது, உலகம் முழுவதும் தமிழும் தமிழர்களும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், கணினியில் இடம்பெற்று தமிழ்மொழி நன்றாக வளர்ந்து கொண்டிருக்கிறது என்றும் இந்தியாவில் 473 மொழிகள் இருந்தன அவற்றில் பல வழக்கிழந்து தற்போது 200 மொழிகள் மட்டுமே காணப்படுகின்றன என்றும் மொழியே நம்முடைய அடையாளம். உலக அளவில் தமிழர்கள் அடையாளப்படுத்தப்பட வேண்டுமானால் மொழியைப் பாதுகாக்க வேண்டும், மேலும் மொழியை வளர்க்க வேண்டும் என்று சிறப்புரையாற்றினார்கள். 


நிறைவு விழாவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்  தமிழியல் துறைத் தலைவர் அ. ராமசாமி கலந்து கொண்டு அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கினார்.  தமிழ்த்துறைப் பேரா. மு. சாதிக் அலி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.  சாராள் தக்கர் கல்லூரி, சாரதா கல்லூரி, நாசரேத் மர்காஷியஸ் கல்லூரி, மா.தி.தா. இந்துக் கல்லூரி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகியவற்றிலிருந்து மாணவர்களும் பேராசிரியர்களும் கலந்து கொண்டனர். அரசுதவி பெறா தமிழ்த்துறைத் தலைவர் இரா. அனுசுயா நன்றி கூறினார்.  



செய்தி மற்றும் படம்

திரு. சரவணவேல்.

No comments:

Post a Comment