மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Sunday, 10 September 2017

கண்தானம் வழங்கிய குடும்பத்திற்கு ஆட்சியர் பாராட்டு.



திருநெல்வேலி அகர்வால் கண்மருத்துவமனையில் நடைபெற்ற 32வது  தேசிய கண்தான இருவார விழாவில் கண்தானம் வழங்கிய குடும்பத்தினரை மாவட்ட ஆட்சியர் பாராட்டு தெரிவித்தார். 

திருநெல்வேலி அகர்வால் கண்மருத்துவமனை   கண் வங்கிக்கு   உதவும்  உறுப்பினர்களை  கௌரவித்தல் கண்தானம்   வழங்கியோருக்கு பாராட்டு உள்ளிட்டவை  நடைபெற்றது. 

இந்த விழாவை தொடங்கி வைத்து   மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி பேசியதாவது… அகில இந்திய அளவில்   கண்தானம்  தேவைபடுவோரில் 30 சதவீதம் பேர் மட்டுமே   பயன்பெறும் நிலை உள்ளது. பதிவு செய்து  விட்டு காத்திருக்கும்  70சதவீதம் பேருக்கு கண்தானம் கிடைப்பதில்லை, எனவே இறந்த பிறகு   கண்தானம் செய்வதை அதிகரிக்க செய்ய  வேண்டும். ஒருவர் அளிக்கும்   கண்களால்; குறைந்தது   4பேர் தானம் அளித்து  கண்பார்வை கிடைக்க   இயலும். இதற்கு குடும்ப உறுப்பினர்கள்  உறுதுணையாக இருக்க வேண்டும்.  இந்த வகையில் அகர்வால் கண்மருத்துவமனை     கண்வங்கிக்கு உதவும்  இயக்கங்களின்  பங்களிப்பு  பாராட்டுக்குரியது.

இந்த விழாவில் 1000 பேர்  கண்தானம் வழங்கும்  படிவங்களை சமர்ப்பித்திருப்பது  போற்றுதலுக்குரியதாகும் என்றார்.  தொடர்ந்து   கண்தானம் வழங்கிய குடும்பத்தினற்கு   சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தார். தென்மண்டல மருத்துவ இயக்குனர் டாக்டர் லயனல்ராஜ் பேசினார்.  இந்த விழாவில் கண்தான   இயக்க  நிர்வாகிகள், மருத்துவர்கள்,  செவிலியர்கள், தன்னார்வ   அமைப்பினர்  கலந்து   கொண்டனர். 

No comments:

Post a Comment