ஆரோக்கியநாதபுரத்தில்
தூய்மையே சேவை இயக்கம் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. மத்தியஅரசின் தகவல்
மற்றும் ஓலிபரப்பு அமைச்சகத்தின் கள விளம்பரத்துறை திருநெல்வேலி, பொதுசுகாதாரம் மற்றும் நோய்தடுப்புத் துறையின் ஆராய்ச்சி
செயல்திட்டம் மற்றும் குழந்தை இயேசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் இந்நிகழ்ச்சி நடந்தது.
பொதுசுகாதாரம் மற்றும் நோய்தடுப்புத்துறையின் ஆராய்ச்சி செயல்திட்ட
பொறியாளர் திரு.கணேச பெருமாள்
தலைமைவகித்து பேசும்போது வீடுகளில் கழிப்பறை இல்லாதவர்கள் கண்டிப்பாக கழிப்பறை
கட்டி பயன்படுத்த வேண்டும் மற்றும் கழிப்பறை உள்ளவர்கள் முறையாக அதைப்பயன்படுத்த
வேண்டும் என்று வலியுறுத்தினார் திறந்த வெளியில் மலம் கழிப்பதால் பல்வேறு தொற்று
நோய்கள் ஏற்படுகிறது. அதைப் போக்க திறந்த வெளியே கழிப்பறையாக பயன்படுத்துவதை
மக்கள் தவிர்க்கவேண்டும் என்றார்.
கழிப்பறை
கட்ட அரசு 12,000 நோய் மானியமாக
கொடுக்கிறது. அதை மக்கள் பயன்படுத்தி கழிப்பறை கட்ட முன்வரவேண்டும் என்று
வலியுறுத்தினார். நிகழ்ச்சயில் சுகாதார ஆய்வாளர் திரு.முத்துராமன் அவர்கள் தொற்று
நோய்கள் குறித்தும் அதிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ளும் முறைகள் குறித்தும் எடுத்துரைத்தார்.
களவிளம்பர உதவி அலுவலர் போஸ்வெல் ஆசீர் நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து
உரையாற்றினார்.
நிகழ்ச்சியில்
குழந்தை இயேசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள்
கலந்துகொண்ட தூய்மையே சேவை இயக்கம் விழிப்புணர்வு பேரணியை பொதுசுகாதாரம் மற்றும்
நோய்தடுப்புத்துறையின் ஆராய்ச்சி செயல்திட்ட பொறியாளர் திரு.கணேசபெருமாள் துவக்கி
வைத்தார்.

No comments:
Post a Comment