மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Thursday, 28 September 2017

பெண் வன்கொடுமை மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி.




பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் பெண் வன்கொடுமை மற்றும் பாதுகாப்புத் துறையின் சார்பில் பெண்களுக்கெதிரான வன்கொடுமைகளிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் நோக்கில் விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி உரையரங்கில் வைத்து நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பெண் வன்கொடுமைப் பாதுகாப்புத் துறையின் ஒருங்கிணைப்பாளர் பேரா. ஏ. ரஷிதா பேகம் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் மு. முஹம்மது சாதிக் அவர்கள் தலைமை தாங்கி தலைமையுரையாற்றினார். 

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக இணையவழிக்குற்றப்பிரிவு  காவல் ஆய்வாளர் திருமதி. பத்மாவதி அவர்கள் கலந்துகொண்டு பெண்களுக்கெதிரான குற்றங்கள் குறித்தும் அதிலிருந்து எவ்வாறு தற்காத்துக்கொள்ள வேண்டுமென்பது குறித்தும் மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 


நிகழ்ச்சியின் இறுதியில் ஆங்கிலத்துறைப் பேராசிரியை முனைவர் கண்ணா முத்தையா அவர்கள் நன்றி கூறினார். ஊட்டச்சத்து துறைப் பேரா. ஆர். சொர்ணலட்சுமி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

செய்தி மற்றும் படம் 
திரு. சரவணவேல்.

No comments:

Post a Comment