அண்ணாவின் 109 வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு
நெல்லை சந்திப்பில் உள்ள அண்ணா சிலைக்கு அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து
மரியாதை செலுத்தினர்.
அதிமுக கட்சி சார்பாக புறநகர் மாவட்ட
செயலாளர் கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை
செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் தச்சை கணேசராஜா, மாவட்ட அவைத்தலைவர் பரணிசங்கரலிங்கம், மாநில அமைப்பு செயலாளர் சுதாபரமசிவம், அண்ணா தொழிற்சஙகம் வேல்பாண்டி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சேர்மபாண்டி, குறிச்சி சேகர்,
எஸ்டி.காமராஜ், பகவதி முருகன், கிருஷ்ணமூர்த்தி, தங்கபிச்சையா, கண்டியபேரி
முத்து, அப்துல்சமது, நெல்லை பகுதி செயலாளர் மோகன், சோமு, ராஜபாண்டி, டவுண்
முகம்மதுஷா, கே.ஆர்.பி.கிருஷ்ணன், முன்னாள் மேயர் புவனேஸ்வரி, முன்னாள் கவுன்சிலர் பரமசிவன், தேமுதிக கட்சி சார்பாக மாவட்ட
செயலாளர் முகம்மது அலி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மாவட்ட துணை செயலளார் ஜெயச்சந்திரன்,
இளைஞரணி செயலாளர் பழனிக்குமார், இளைஞரணி துணை செயலாளர் ஆனந்தமணி, கே.ஏ.எம்.சிவா,
முருகையா, ஜலில்ரகுமான், அந்தோணிராஜ், மாரிமுத்து, கொம்பையாபாண்டியன் மற்றும்
திரளானோர் கலந்து கொண்டனர்.
திமுக கட்சி சார்பாக மத்திய மாவட்ட
செயலாளர் அப்துல்வகாப் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில்
நெல்லை சட்டமன்ற உறுப்பினர் ஏ.எல்.எஸ்.சுப்பிரமணியன் அவைத்தலைவர் சுப.சீதாராமன்,
மாநில நிர்வாகி பெருமாள், முன்னாள் மாநகராட்சி மேயர் உமாமகேஸ்வரி, முன்னாள் மானூர் யூனியன் சேர்மன் ஆ.க.மணி மற்றும்
சண்முகசுந்தரம், மகளிரணி ரேவதி அசோக் உட்பட திரளான திமுக வினர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment