நெல்லை மாவட்டம் பாளை மகாராஜநகர்
ஸ்ரீஜெயேந்திர சுவாமிகள் வெள்ளிவிழா
மேனிலைப்பள்ளியில் நவராத்திரி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
விழாவில்
முப்பெரும் தேவியர்கள் சக்கரத்தாழ்வார் நவராத்திரி கொலுவின் தத்துவ விளக்கம்
வரவேற்றது. ஆதிசங்கரர் மண்டபத்தின் உள்ளே பரமசிவன் பார்வதி ரங்கோலி விஸ்வருபகாட்சி, மீனாட்சி திருக்கல்யாணம், சூரியரதம், கோவர்த்தன ஹரி கண்ணன், கல்ஆலமரத்தடி
தட்சிணாமூர்த்தி, சீனிவாச கல்யாணம், கயிலைமலைக்காட்சி, பிரதோஷ வழிபாடு, ராவண
தர்பார், பீஸ்மர் அன்பு படுக்கை, குழந்தைகளுக்கு பிடித்தமான கொலு பொம்மைகள் என உயிரோட்டமாக கண்கொள்ளா காட்சியாக இருந்தது.
இனிவரும் சந்நதியினருக்கு ஆன்மிக
நெறியில் தொடர்ந்து சாதனை புரியும் வகையில் கொலு அமைந்திருந்தது. விழா ஏற்பாடுகளை
பள்ளி தாளாளர் ஜெயேந்திரன், முதல்வர் ஜெயந்தி ஜெயேந்திரன் முன்னிலையில் ஆசிரியர்கள், அலுவலகர்கள் சிறப்பாக செய்திருந்தனர். இதில் மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டு பார்வையிட்டு
மகிழ்ந்தனர்.
செய்தி மற்றும் படம்
திரு. முத்து.
No comments:
Post a Comment