ரயில்
டிக்கெட்டுகளில் தமிழ் மொழியும் இடம்பெறுவதற்கு ரயில்வே வாரியம் ஒப்புதல்
அளித்துள்ளது.
தற்போது ரயில்வேயால்
வழங்கப்படும் ரயில் டிக்கெட்டுகளில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளே இடம்
பெற்றுள்ளன. இது படிக்காதவர்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தியது. மேலும் ரயில்
டிக்கெட்களில் தமிழ் இடம்பெற வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கைகள்
எழுப்பப்பட்டு வந்தன.
இந்நிலையில் ரயில்
டிக்கெட்டுகளில் தமிழ் மொழியும் இடம்பெறுவதற்கு ரயில்வே வாரியம் ஒப்புதல்
அளித்துள்ளது. இதனை வரும் ஜனவரி
1ஆம் தேதி முதல் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது
தொடர்பாக பயணிகள் உதவிக்குழு மற்றும் ரயில்வே வாரியம்
இடையே நடந்த கூட்டத்தில் இந்த முடிவு
எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment