நெல்லை அருகே ராஜவல்லிபுரத்தில்
செப்பறை அழகியகூத்தர் கோயில் உள்ளது. பஞ்ச சபைகளில் ஒன்றான தாமிரசபையுடன், மகாவிஷ்ணு, அக்னி பகவான், அகஸ்தியர், வாமதேவரிஷி மற்றும் மணப்படை அரசன் ஆகியோர்களுக்கு சிவ பெருமான் நடன
தரிசனம் கொடுத்த சிறப்புப் பெற்ற தலமாக இக்கோயில் விளங்கி வருகிறது.
இக்கோயிலில் ஆனித் திருவிழா, கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 4ம் திருநாளில் சுவாமிக்கு திருவாதிரை அபிஷேகம் நடந்தது. முக்கிய
நிகழ்ச்சியான ஆனித் தேரோட்டம்,
நேற்று காலை கோலாகலமாக நடந்தது.
இதையொட்டி காலையில் அழகியகூத்தர், தேருக்கு எழுந்தருளும் வைபவம் நடந்தது. தொடர்ந்து திரளான பக்தர்கள்
வடம் பிடித்து தேர் இழுத்தனர். ரதவீதிகளில் வலம் வந்து தேர் நிலையை அடைந்தது.
இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.
இன்று (30ம்தேதி) ஆனி திருமஞ்சனமும், காலை 11 மணிக்கு அபிஷேகமும்,
மதியம் 1 மணிக்கு நடராஜர் நடன தீபாராதனை மற்றும் சுவாமி வீதிஉலா நடக்கிறது.
ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ஐயர் சிவமணி, தக்கார் முருகன் மற்றும்
ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர். செப்பறை கோயில் தேரோட்டத்தை பார்வையிட வந்த இங்கிலாந்து
நாட்டை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் வருகை தந்தனர்.

No comments:
Post a Comment