மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Tuesday, 27 June 2017

செப்பறை அழகிய கூத்தர் கோயிலில் நாளை தேரோட்டம்.





நெல்லை அருகே ராஜவல்லிபுரத்தில் செப்பறை அழகியகூத்தர் கோயில் உள்ளது. பஞ்ச சபைகளில் ஒன்றான தாமிரசபையும், மகா விஷ்ணு, அக்னி பகவான், அகஸ்தியர், அங்கி, வாமதேவரிஷி மற்றும் மணப்படை அரசன் ஆகியோர்களுக்கு சிவ பெருமான் நடன தரிசனம் கொடுத்த சிறப்பு பெற்ற தலமாக இக்கோயில் விளங்கி வருகிறது.

இக்கோயிலில் ஆனி திருமஞ்சன திருவிழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 4ம் திரு நாளான கடந்த 24ம் தேதி சுவாமிக்கு திருவாதிரை அபிஷேகம் நடந்தது. இதைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (29ம் தேதி ) நடக்கிறது. நாளை காலை 11 மணிக்கு அழகியகூத்தர், தேருக்கு எழுந்தருளும் வைபவமும், பகல் 11 மணி முதல் 12 மணிக்குள் பக்தர்கள் வடம் பிடிக்க இழுக்க தேரோட்டம் நடக்கிறது.

ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ஐயர் சிவமணி, தக்கார் முருகன் மற்றும் ஊர் பொது மக்கள் செய்துள்ளனர்.

No comments:

Post a Comment