மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Tuesday, 27 June 2017

ஜூலை 10ல் பிஎப் குறை தீர்க்கும் கூட்டம்.





நெல்லையில் ஜூலை 10ல் பிஎப் குறை தீர்க்கும் கூட்டம்.


இது குறித்து உதவி வருங்கால வைப்புநிதி ஆணையர் ரமேஷ் கூறியிருப்பதாவது:
நெல்லை தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் அதன் மண்டல ஆணையாளர் சனத்குமார்  வருங்கால வைப்புநிதி குறைதீர்க்கும் கூட்டத்தை ஜூலை 10ம் தேதி நடத்துகிறார்.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள் மற்றும் தொழிலதிபர்களின் குறைகள் ஏதேனும் தீர்க்கப்படாமல் ஒருமாத காலத்திற்கும் மேலாக நிலுவையில் இருந்தால் அவற்றை நிவர்த்தி செய்ய மனு மூலம் “மண்டல ஆணையாளர், வருங்கால வைப்பு நிதி நிறுவனம், என்ஜிஓ ’பி’ காலனி, திருநெல்வேலி-7” என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். மனுவின் மேலே “வருங்கால வைப்பு நிதி உங்கள் அருகில்” என குறிப்பிட்டு அவற்றை ஜூன் 30ம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

“வருங்கால வைப்பு நிதி உங்கள் அருகில்” கூட்டம் “வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்களுக்கு காலை 10:30 மணி முதல் 1 மணி வரையும், தொழிலதிபர்களுக்கு பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரையும், வருங்கால வைப்பு நிதி விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு மாலை 4 மணி முதல் 5 மணி வரையும் நடத்தப்படும்.

மனு அனுப்பியவர்கள் 10ம் தேதி கால அட்டவணைப்படி மண்டல ஆணையாளரை நேரில் சந்தித்து குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment