நெல்லையில் தனிஷ்க் ஷோரூம் திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது.
நெல்லை பழைய பேரூந்து
நிலையம் நைனார் காம்பிளக்ஸ்-ல் டாடா கோல்டுபிளஸ் ஷோரூம் இனி தனிஷ்க் ரீடைல்
வலையமைப்பின் ஒரு பகுதியாக திகழும். தனிஷ்க் அதன் முதல் ஷோரூமை நமது
திருநேல்வேலியில் திறந்துள்ளது. இதுவரை டாடா கோல்டு பிளஸ் ஷோரூம் என நம்மால்
அறியப்பட்ட இந்த ஷோரூம் இனி தனிஷ்க் ரீடைல் வலையமைப்பின் 211 வது ஷோரூம் ஆகும்.
இதன் திறப்பு விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
திறப்பு விழாவில் சிறப்பு
விருந்தினராக டைட்டன் கம்பெனி லிமிடெட் ஜுவல்லரி பிரிவின் பிசினஸ் டெவலப்மென்ட்
தலைவர் திரு. வைத்தீஸ்வரன் அவர்கள் தனிஷ்க் ஜுவல்லரி ஷோரூமை திறந்து வைத்து சிறப்பித்தார். துவக்க விழாவில் திருநெல்வேலி கிளையின் உரிமையாளர் திரு.
ஹரிகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர். மற்றும் தனிஷ்க் நிறுவனத்தின் மண்டல
விற்பனை பிரிவு மேலாளர் திரு. ஸ்ரீ கிருஷ்ணா, நிறுவன அதிகாரிகள் திரு. ராஜா, திரு.
சந்திரசேகரன், திரு. பாலசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
திறப்பு விழாவை முன்னிட்டு
தங்க நகைகளுக்கு, 21 ம் தேதி முதல் 23 ம் தேதி வரை இலவச தங்க நாணயம்
வழங்கப்படுகிறது. தனிஷ்க் ஜுவல்லரியில் திருமண நகைகள், பிறந்த நாள் நகை கலெக்ஷன்,
தென்னிந்திய, வட இந்திய லைட்வெயிட் கலெக்ஷன் நகைகள், வளையல்களுக்கு என பிரத்யேக
பிரிவு, 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தங்க நகை டிசைன்கள், வைரத்திற்கு என
தனிப்பிரிவு, கோல்டன் ஹார்வெஸ்ட் என்ற தங்க நகை சேமிப்பு திட்டம் 8 சதவீதமும், செதாரத்தில் இருந்து தங்க நகைகள்
கிடைக்கும். எக்ஸ்சேஞ்ச் திட்டத்தின் மூலம் தங்கத்தின் தூய்மையை கணக்கிட காரட்
மீட்டர் மூலம் உறுதி செய்யலாம் என தனிஷ்க் ஜுவல்லரி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விழாவில்
வாடிக்கையாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தனிஷ்க்
ஜுவல்லரியின் உயர் அதிகாரிகள், விற்பனை அதிகாரிகள், நிர்வாகிகள் மற்றும் தனிஷ்க்
ஜுவல்லரி பணியாளர்கள் செய்திருந்தனர்.


No comments:
Post a Comment