நெல்லை நகர்புறமின் விநியோக
செயற்பொறியாளர் ஐசன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது... கொக்கிரகுளம் உபமின் நிலையத்தில்
நாளை (1ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
இதன் காரணமாக நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கொக்கிரகுளம், நெல்லை சந்திப்பு, மீனாட்சிபுரம்,
மணிமூர்த்தீஸ்வரம், உடையார்பட்டி முருகன்குறிச்சி, திருவனந்தபுரம் ரோடு, வடக்கு மற்றும் தெற்கு பைபாஸ் சாலை, வண்ணார்பேட்டை, குருந்துடையார்புரம், அம்பை சாலையின் மேற்கு பகுதிகளான
மெயின் பஜார், நேதாஜி ரோடு, குறிச்சி, நத்தம், குட்டிமூப்பன் தெரு, காஜா நாயகம் தெரு, அத்தியடி தெரு ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
மின்னோட்டத்திற்கு இடையூறாக
இருக்கும் மரக்கிளைகள் போன்றவைகளை அகற்ற பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment