நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி
மருத்துவமனையில் உலக வெண்புள்ளி விழிப்புணர்வு வார விழா நடந்தது. துறை தலைவர் டாக்டர்
நிர்மலாதேவி வரவேற்றார். மருத்துவக்கல்லூரி டீன் சித்தி அத்திய முனவரா, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வெளியிட்டு பேசியதாவது:
பொதுமக்களில் 1.84 சதவீதம் பேரை வெண்புள்ளி நோய் பாதித்துள்ளது. ஆண்களை விட பெண்களுக்கு
இரு மடங்கு பாதிப்பு ஏற்படுகிறது. இது சிறு வயது முதல் முதியவர் வரை யாருக்கு வேண்டுமானாலும்
ஏற்படலாம், காரணம் தெரியாத ஒவ்வாமை காரணமாக நமது உடலில் ஏற்படும்
ஒருவித மெலானின் என்ற கருப்பு நிற பொருளை உற்பத்தி செய்யும் திசு அணுக்களை அழிப்பதால்
ஏற்படுகிறது.
இது தொற்று வியாதி அல்ல.
தாய்க்கு இருந்தால் குழந்தைக்கு பால் கொடுக்க தயங்க வேண்டாம். அவர்கள் எப்போதும்
போல் குழந்தை பெற்றுக் கொள்ளலாம்,
ஆரம்ப நிலையிலேயே மருத்துவரை
அணுகி ஆலோசனை பெற்றால் குணப்படுத்தவும் பரவுவதை தடுக்கவும் முடியும். இவ்வாறு அவர்
கூறினார்.
இதில் தோல்நோய் பிரிவு முன்னாள்
துறை தலைவர் டாக்டர் மகாகிருஷ்ணன், மருத்துவக்கல்லூரி துணை
முதல்வர் கண்ணன், டாக்டர் ஆறுமுகம், மக்கள் தொடர்பு அலுவலர்
டாக்டர் ரேவதி பாலன், நுண்ணுயிரியல் துறை தலைவர் டாக்டர் கிருஷ்ணலீலா
ஆகியோர் பேசினர்.

No comments:
Post a Comment