நெல்லையில் ஜூலை 3 ம் தேதி தொழில்கடன் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுதொடர்பாக, ஆட்சியர் சந்தீப்
நந்தூரி கூறியதாவது: தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின், திருநெல்வேலி கிளை
சார்பில் ஜூலை 3ஆம் தேதி தொடங்கி 7ஆம் தேதி வரை சிறப்புக் கடன் திட்ட முகாம் நடைபெறுகிறது.
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஏ.ஏ.ஆர். ராயல் பார்க்
ஹோட்டலில் ஜூலை 3ஆம் தேதி நடைபெறும் தொடக்க விழாவில், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக
நிர்வாக இயக்குநர் சத்யபிரதா சாகு பங்கேற்று முகாமைத் தொடங்கி வைக்கிறார். இதன் தொடர்ச்சியாக இந்த சிறப்பு முகாமானது
திருநெல்வேலி, வண்ணார்பேட்டையில் உள்ள சகுந்தலா ஹோட்டல் வணிக வளாகத்தில் உள்ள
திருநெல்வேலி கிளை அலுவலகத்தில் 7ம் தேதி வரை முகாம் நடைபெறும்.
இந்த முகாமில் தொழில்முனைவோர்
தங்களது தொழில் திட்டங்களுடன் பங்கேற்று கடன், மானிய சலுகைகளை பெற்றுக் கொள்ளலாம்.
திருநெல்வேலி மாவட்டத்தை தொழில் துறையில் முதன்மை மாவட்டமாக மாற்ற அனைத்து நடவடிக்கைகளும்
மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

No comments:
Post a Comment