திருநெல்வேலி ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரியில் 9ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
திருநெல்வேலியை அடுத்துள்ள சீதபற்பநல்லூரில் இயங்கி வரும் ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரியின் 9ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழா 25.06.3027 ஞாயிறு காலை 9.30 மணிக்கு கல்லூரி வளாகத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா அரங்கத்தில் வைத்து நடைபெற்றது.
பட்டமளிப்பு விழாவிற்கு அமெரிக்காவில் உள்ள டீசில் டெலிமாட்டிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் உரிமையாளர் வெங்கி கருப்பண்ணன் முக்கிய விருந்தினராக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார். கல்லூரி அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் அமுதவாணன் விழாவினை வழிநடத்தினார். கல்லூரி நிர்வாக செயலர் எழில்வாணன் மற்றும் கல்லூரி முதல்வர் ராமர் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினார்கள்.
பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்களும், பட்டங்களும் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். இந்த விழாவில் கல்லூரி மாணவ, மாணவியர், பெற்றோர், ஆசிரியர் உட்பட பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். பட்டமளிப்பு விழாவினை கல்லூரி நிர்வாகம் சிறப்பாக செய்திருந்தது.

No comments:
Post a Comment