பிரான்சிஸ் சேவியர் CBSE பள்ளி மற்றும் தூய சவேரியார் மெட்ரிக் பள்ளிகளில் உலக யோகா தினம்.
வண்ணார்பேட்டை
பிரான்சிஸ் சேவியர் CBSE பள்ளி மற்றும் தூய சவேரியார் மெட்ரிக் பள்ளிகளில் உலக
யோகா தினம் கொண்டாடப்பட்டது.
இதில் ஸ்காட்
கல்விக் குழுமங்களின் தலைவர் முனைவர். கிளிட்டஸ் பாபு அவர்கள் தலைமை வகித்தனர்.
விழாவில் முதல் வகுப்பு பதினொன்றாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் பலவிதமான
யோகாசனங்களை மிக அற்புதமாக செய்து அனைவரையும் வியப்புக்குள்ளாக்கினார்கள்.
விழாவின்
சிறப்பு விருந்தினர்களாக திருநெல்வேலி இன்னார் வில் கிளப் முன்னாள் மாவட்ட சேர்மன்
திருமதி. அமுதா இராஜேந்திரன், தலைவர் திருமதி. பாரதி ரதி, செயலாளர் திருமதி. கோமதி
மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் ஸ்காட் குழுமங்களின் நிதித்துறை போது
மேலாளர் திரு. இக்னேஷியஸ் சேவியர், நிர்வாக அதிகாரி திரு. கிருஷ்ணகுமார், பள்ளியின்
தாளாளர் திருமதி. மெனாண்டஸ், தலைமை ஆசிரியர் திருமதி. கல்விழி ரீட்டா ஆகியோர்
முன்னிலை வகித்தனர்.
பிரான்சிஸ் சேவியர் பள்ளியின் முதல்வர் திருமதி. உமாராணி
வரவேற்புரை வழங்கினார். திருநெல்வேலி இன்னார் வீல் கிளப் தலைவர் திருமதி. பாரதி
ரதி வாழ்த்துரை வழங்கினார். யோகாவின் சிறப்பு அம்சம் பற்றி யோகா ஆசிரியர் திரு.
அழகேசராஜா சிறப்புரை ஆற்றினார். மாவட்ட யோகா சங்கத் தலைவர் நன்றி உரையாற்றினார்.


No comments:
Post a Comment