இப்போது புதிதாக
ஒரு மால்வேர், இணைய வைரஸ் உலக நாடுகளிடையே பரவிக் கொண்டிருக்கிறதாம். இந்தப்
புதிய மால்வேர், ரஷ்யாவின் உக்ரைனில் விதைக்கப் பட்டதாகக் கருதப்படுகிறது.
நேற்று
மதியத்திலிருந்து உலகின் பல நாடுகளில் கூடுதல் வலிமை கொண்ட இணைய வைரஸ் ஒன்று தன்
வேலையைக் காட்டத் தொடங்கி உள்ளது. உலகெங்கிலும் இருந்து பலர் மால்வேர்
தாக்குதலுக்குட்பட்டு செயலிழந்து விட்ட தங்கள் மடிக்கணினிகள் மற்றும் மேஜைக்
கணினிகளின் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.
ரஷ்யாவிலிருந்து
பரவத் தொடங்கிய இந்த மால்வேர் ஐரோப்பாவின் அனைத்து கணிகளையும் ஊடுருவியதோடு மொத்த
உலகையுமே ஒரு ஆட்டு ஆட்டி வைக்கப் போவதாக என் உள்ளுணர்வு சொல்வதால் எனக்கு மிகுந்த
கவலையாக இருக்கிறது என இன்ஃபோசேஃப் எனும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் செயல்
தலைவர் விக்டர் ஸோரா குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பாவில் 60% கணினிகளைத் தாக்கி
முடக்கியுள்ள இந்த வைரஸ் உக்ரைனிலும் கணிசமாக கைவரிசையைக் காட்டியிருக்கிறது.
மிகப்பெரிய மால்கள், மருத்துவமனைகள்,
வங்கிகள், கேஸ் ஏஜன்ஸிகள், என முக்கியமான
வர்த்தக மற்றும் சேவை நிறுவனங்களின் கணினிகளை எல்லா முடக்கியுள்ள இந்த மால்வேரை
எப்படி ஒழித்துக் கட்டுவது என கணிப்பொறியியல் வல்லுனர்கள் தற்போது கடுமையாக
விவாதித்து வருகிறார்கள்.

No comments:
Post a Comment