கழிவுநீர் ஓடையை சீரமைக்க வேண்டும்- மக்கள் வேண்டுகோள்.
பாளையங்கோட்டை
வ.உ.சி. மைதானம் அருகில் சிறுவர் பூங்கா உள்ளது. அதன் அருகில் கழிவுநீர் ஓடை
அமைக்கப்பட்டுள்ளது. இந்த கழிவுநீர் ஓடை கட்டி ஐந்து வருடங்களாகிறது. இந்த ஓடையின்
முடிவில் அடைப்பு இல்லாமல் திறந்து கிடக்கிறது.
இதிலிருந்து வரும் விஷவாயு தாக்கி
சிலர் கவலைக்கிடமாக உள்ளனர். இதனை மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதனால்
சிறுவர் பூங்காவிற்கு வருகை தரும் குழந்தைகள், முதியவர்கள் பெரும்
சிரமத்துக்குள்ளாகி உள்ளனர்.
ஆகையால் இந்த ஓடையின் முடிவில் ஒரு பைப் வைத்து இதனை
சரி செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள்
கேட்டுக்கொண்டுள்ளனர்.


No comments:
Post a Comment