மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Sunday 12 November 2017

FX பொறியியல் கல்லூரியில் ஊழல்தடுப்பு மற்றும் கண்காணிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு.



நெல்லை வண்ணார்பேட்டை  எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு விழிப்புணர்வு  கருத்தரங்கு  கல்லூரி கலை அரங்கில் மிகவும் சிறப்பாக இறைவணக்கத்துடன் துவங்கியது. 

வந்திருந்த அனைவரையும் கல்லூரி முதல்வர் முனைவர் வி.இளங்கோவன் வரவேற்றதோடு  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நெல்லை வருமானவரித்துறை துணை ஆணையர் திரு. எஸ்.மைக்கேல் ஜெரால்டு (இந்திய வருவாய்த்துறை)   அவர்களை அறிமுகம் செய்து வைத்தார்.  

சிறப்பு விருந்தினர்  தனது உரையில் வருமானவரி செலுத்துவதால் நாட்டுக்கு ஏற்படக்கூடிய நன்மைகள் மற்றும் வளர்ச்சிப்பணிகள் பற்றி தெளிவு படுத்தியதுடன் வருமானவரி செலுத்த வேணடிய கட்டாயத்தையும் குறித்த விழிப்புணர்வு பற்றி வலியுறுத்திப் பேசினார்.


  இக்கருத்தரங்கில் மாணவ மாணவியர் ஏராளமாக கலந்துகொண்டு லஞ்ச ஊழலற்ற சமுதாயத்தை உருவாக்க முயல்வோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்இக்கருத்தரங்கில்  ஸ்காட் குழுமங்களின் செயல் இயக்குநர் திருமதி. மெனான்டஸ், பொதுமேலாளர் (வளர்ச்சி)  முனைவர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு  வாழ்த்துரை வழங்கினர்.  பேராசிரியர் சதீஷ் நன்றியுரையாற்றினார்.   இந்த கருத்தரங்கு தேசிய கீதத்துடன்  இனிதே நிறைவுற்றது.  
    

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் நிர்வாக அதிகாரி திரு.எஸ்.கிருஷ்ணகுமார் மற்றும் பேராசிரியர்கள்  சிறப்பாக செய்திருந்தனர்.    

No comments:

Post a Comment