மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Saturday 4 November 2017

செங்குளம் கிராமத்தில் டெங்கு விழிப்புணர்வு மற்றும் தூய்மை சேவைப் பணி.


செங்குளம் கிராமத்தில் எப்.எக்ஸ். கல்லூரி மாணவர்களின் டெங்கு விழிப்புணர்வு மற்றும்  தூய்மை சேவைப் பணி.

      நெல்லை வண்ணார்பேட்டை  எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியைச் சார்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் மற்றும் பேராசிரியர்கள் இணைந்து  மத்திய அரசின் தூய்மை சேவைதிட்டத்தின் கீழ்  செங்குளம் கிராமத்தில் டெங்கு விழிப்புணர்வு பேரணி மற்றும் தூய்மை சேவைப்பணிகளை மேற்கொண்டனர். 

  இப்பணியினை கல்லூரி முனைவர் முதல்வர் வி.இளங்கோவன் துவக்கி வைத்தார். டெங்கு விழிப்புணர்வு மற்றும் தூய்மை சேவை பணிகளை மேற்கொள்வதன் பயன்பாடுகள் குறித்து ஸ்காட் கல்விக் குழுமங்களின் செயல் இயக்குநர் திருமதி. மெனான்டஸ் மற்றும் பொது மேலாளர் (நிதி) திரு.இக்னேஷியஸ் சேவியர் மாணவ மாணவியருக்கு எடுத்துரைத்தனர். 


மாணவ மாணவியர் செங்குளம் கிராம சுகாதார அலுவலர்களுடன் இணைந்து  பேரணி நடத்தியதோடு கிராம மக்களின்  இருப்பிடங்களையும்தன்னார்வத்துடன் சுத்தம் செய்து அவர்களுடைய வீடுகளை சந்தித்து வீடுகளில் டெங்கு கொசுக்கள் வளரவிடாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் குறித்தும் தெளிவு படுத்தினர்.  இப்பணிகளுக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் நிர்வாக அதிகாரி திரு.எஸ்.கிருஷ்ணகுமார் மற்றும் பேராசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

No comments:

Post a Comment