மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Thursday 9 November 2017

இடிந்து விழும் அபாயத்தில் இருக்கும் 46 வீடுகள் : மாநகராட்சி நோட்டீஸ்





மேலப்பாளையத்தில் இடிந்து விழும் அபாயத்தில் இருக்கும் 46 வீடுகளை  இடிக்குமாறு அதன் உரிமையாளர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள்  நோட்டீஸ் அளித்துள்ளனர். வடகிழக்குப் பருவமழை  நீடித்து வருவதால் மாநகராட்சிப் பகுதியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து  தினமும் மாநகராட்சி ஆணையர் (பொநாராயண்நாயர் தலைமையில்  அதிகாரிகள் முகாமிட்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்

மேலப்பாளையம் மண்டலத்தில் வார்டு 28,  37 மற்றும் 38ஆவது வார்டுகளில்  இடிந்து  விழும் அபாய நிலையில் இருக்கும் ஓடு,   கூரை வீடுகளை  மாநகராட்சி  உதவி ஆணையர் கவிதா   தலைமையில்அதிகாரிகள்  ஆய்வு மேற்கொண்டனர்இதில்மேலப்பாளையம் ஷெய்குல்அக்பர் தெருவிளாகம்உள்பட பல்வேறு பகுதியில் இடிந்து விழும் நிலையில்காணப்பட்ட  46 வீடுகளின் உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் அளித்தனர்

பழுடைந்த வீடுகள்கட்டடத்தை மாநகராட்சி அறிவிப்பு கிடைத்த 2 நாள்களில் அப்புறப்படுத்த வேண்டு ம்தவறும்பட்சத்தில் மாநகராட்சி சட்டப்பிரிவு 327இன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செய்தி மற்றும் படம் 
திரு. முத்து.


No comments:

Post a Comment